இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

ஹோண்டா சிஆர்-வி காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது. ஏன் என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே வாகனங்களை வாங்கும்போது அதில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அலசி ஆராய்கின்றனர்.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

குறிப்பாக 10 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட விலையில் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு அம்சங்களை மிக தீவிரமாக கவனிக்கின்றனர். இதன் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல்வேறு அதிநவீன பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகின்றன.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

எனவே தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பானவையாக மாறியுள்ளன. இந்த சூழலில், லேட்டஸ்ட் ஹோண்டா சிஆர்-வி கார், யூரோ என்சிஏபி (Euro NCAP) கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

இதில், ஹோண்டா சிஆர்-வி கார், 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. 5 ஸ்டார்கள்தான் அதிகபட்ச ரேட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனம் ஆல் நியூ சிஆர்-வி எஸ்யூவி காரை, இந்திய மார்க்கெட்டில் கடந்தாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

5ம் தலைமுறை ஹோண்டா சிஆர்-வி கார் பெட்ரோல் சிவிடி 4×2, டீசல் ஏடி 4×2, டீசல் ஏடி 4×4 என இந்தியாவில் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் சிவிடி 4×2தான் இருப்பதிலேயே விலை மலிவான வேரியண்ட் ஆகும்.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

இதன் விலை 28.15 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). இது என்ட்ரி லெவல் பெட்ரோல் பார்ச்சூனரை காட்டிலும், 88 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் ஹோண்டா சிஆர்-வி கிடைக்கிறது.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் சிஆர்-வி காரில் தற்போதுதான் முதல் முறையாக டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

6 ஏர் பேக்குகள், டிரைவர் அட்டென்ஸன் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன் உள்பட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

யூரோ என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், ஹோண்டா சிஆர்-வி கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் உதவி செய்துள்ளன. இதனிடையே ஹோண்டா சிஆர்-வி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சிஆர்-வி தவிர, ஹோண்டா ஜாஸ், ஹோண்டா ஹெச்ஆர்-வி மற்றும் சிவிக் ஆகிய கார்களும் கூட 5 ஸ்டார் ரேட்டிங்குடன் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா கார்களின் பாதுகாப்பை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

மத்திய அரசும் தற்போது கார்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டத்தை (Bharat New Vehicle Safety Assessment Program- BNVSAP) மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருகிறது.

இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், ஏபிஎஸ், ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை இது கட்டாயமாக்குகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
New Honda CR-V Gets 5-Star Safety Rating In Euro NCAP Crash Test-Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X