க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா இஎக்ஸ் வேரியண்ட்டின் விலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. விற்பனையிலும் பெரும் எண்ணிக்கையை மாதந்தோறும் பதிவு செய்து வருகிறது. இந்தநிலையில், ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை குறிவைத்து பல புதிய மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், சற்று நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

இந்த சந்தை நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், க்ரெட்டா எஸ்யூவியில் இஎக்ஸ் என்ற புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய். ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் இ ப்ளஸ் என்ற பேஸ் வேரியண்ட்டைவிட சற்று கூடுதல் விலை கொண்டதாகவும் எஸ்எக்ஸ் வேரியண்ட்டைவிட விலை குறைவான வேரியண்ட்டாகவும் இஎக்ஸ் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

இதனால், பேஸ் வேரியண்ட்டைவிட கூடுதல் வசதிகளை இந்த இஎக்ஸ் வேரியண்ட்டில் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த இஎக்ஸ் வேரியண்ட்டானது க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் பெற்றுக் கொள்ளலாம்.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

பெட்ரோல் இஎக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.10.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும், டீசல் இஎக்ஸ் வேரிண்ட்டிற்கு ரூ.10.99 லட்சம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இ ப்ளஸ் என்ற பேஸ் வேரியண்ட்டைவிட முறையே ரூ.85,000 மற்றும் ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

புதிய பெட்ரோல் இஎக்ஸ் வேரியண்ட்டில் பகல் நேர விளக்குகளுடன் கூடிய பனி விளக்குகள் அறை, பின்புற இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட், கப்ஹோல்டர், பின் இருக்கையில் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்டுகள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

மேலும், 5.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், யுஎஸ்பி சார்ஜர், இரண்டு டிவிட்டர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

அதேநேரத்தில், இ பிளஸ் என்ற ஆரம்ப விலை வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டு வந்த 5.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், இரண்டு டிவிட்டர்கள், மேப் லைட், சன்கிளாஸ் ஹோல்டர், முன்புற யுஎஸ்பி சார்ஜர், 4 ஸ்பீக்கர்கள், கீ லெஸ் என்ட்ரி வசதி ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. அதாவது, மறைமுகமாக விலையை ஏற்றி புதிய வேரியண்ட்டாக கொண்டு வந்துவிட்டது.

க்ரெட்டா எஸ்யூவி விலையை மறைமுகமாக ஏற்றியது ஹூண்டாய்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் இதுவரை வழங்கப்பட்டு வந்த எஸ் என்ற வேரியண்ட்டும் நீக்கப்பட்டுவிட்டது. டீசல் மாடலில் மட்டுமே இந்த வேரியண்ட் இனி கிடைக்கும். இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்ததுடன், குறைவான விலை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வாக இருந்தது. அதுவும் இனி இல்லை.

Source: ACI

Most Read Articles
English summary
New Hyundai Creta EX variant launched In India.
Story first published: Friday, April 5, 2019, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X