எடப்பாடியின் கைராசி... ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விற்பனை ஆஹா, ஓஹோ!

கடந்த ஜூலை மாதம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே சில எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், தனிநபர் எதிர்பார்ப்புகளையும், பயன்பாட்டிற்கும் மிகச் சிறந்த அம்சங்களுடன் கூடிய இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா வந்தது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

விலை ரூ.25 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டதால், எந்தளவு வரவேற்பு பெறும் என்ற ஐயமும் இருந்தது. இந்த நிலையில், சென்னை ஹூண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலெக்ட்ரிக் கார்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விற்பனைக்கான அறிமுகத்தை துவங்கி வைத்தார்.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த ஆண்டு 500 யூனிட்டுகளை விற்பனை செய்வதற்கு இலக்கு வைத்து ஹூண்டாய் மோட்டார்ஸ் களமிறக்கியது. ஆனால், எதிர்பாராத வரவேற்பை இந்த கார் பெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

தற்போது இந்த காருக்கு 5 மாதங்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் வரிச்சலுகை மூலமாக தற்போது இந்த காரின் விலை ரூ.23.71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

மேலும், ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், சப்ளை செய்வதில் உள்ள சிக்கல்களை மனதில் கொண்டு ஹூண்டாய் திணறி வருவதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தளவுக்கு வரவேற்பை பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்துனை அம்சங்களையும் மிகச் சரியாக பூர்த்தி செய்வதுதான் முக்கிய காரணமாக கூறலாம். முதல் காரணம், இந்த கார் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த 5 சீட்டர் மாடலாக வந்திருக்கிறது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அடுத்து, இந்த காரில் 39.2 kWh திறன் வாய்ந்த பேட்டரியும், அதற்கு ஈடுகொடுக்கும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் 134 பிஎச்பி பவரையும், 495 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க வல்லது.

 எடப்பாடியின் கைராசி... விற்பனையில் கலக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக ஹூண்டாய் தெரிவிக்கிறது. நடைமுறையில் சராசரியாக 350 கிமீ தூரம் வரை செல்வதாக கோனா உரிமையாளர்கள் குறிப்புகளுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

source: Moneycontrol

Most Read Articles
English summary
According to report, Hyundai Kona electric car has been sold out for this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X