5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

செல்டோஸ் மூலமாக இந்தியாவில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கும் கியா மோட்டார் நிறுவனம் அடுத்து 5 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை கடந்த மாதம் விற்பனைக்கு களமிறக்கியது. இதைத்தொடர்ந்து, கார்னிவல் எம்பிவி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

இந்த நிலையில், இந்தியாவில் குறுகிய காலத்தில் சந்தையில் வலுப்பெறும் விதமாக, 5 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதில், 2 எலெக்ட்ரிக் கார்கள் உள்பட 5 பிரிமீயம் ரக கார் மாடல்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

மேலும், புதிய இறக்குமதி கொள்கையை பயன்படுத்தி, சில பிரிமீயம் கார்களை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்திய விதிகளுக்கு இணையாக எந்த மாற்றங்களும் இல்லாமல் 2,500 கார்களை விற்பனை செய்யும் புதிய விதி அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

இதனை பயன்படுத்தி சில பிரிமீயம் ரக கார்களை இந்தியாவில் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதேபோன்று, இரண்டு எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

சில மாடல்களை முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து, ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, குறுகிய காலத்தில் பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான வாய்ப்பை அந்த நிறுவனம் கைவசம் வைத்துள்ளது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

அதாவது, இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான சந்தையில் பல புதிய கார்களுடன் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தி கொள்ளும் திட்டத்தை மனதில் வைத்து செயலாற்றி வருகிறது. வெளிநாடுகளில் பிரபலமான சில கியா மாடல்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

மேலும், இந்தியாவில் தனது சோல் மற்றும் நிரோ ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களையும் விற்Hனைக்கு கொண்டு வருவதற்கான திட்டம் அந்நிறுவனத்திடம் உள்ளது. தவிரவும், தனது ஸ்டிங்கர் பிரிமீயம் செடாந் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தெரிகிரது.

5 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க கியா மோட்டார் திட்டம்!

அடுத்ததாக, கியா சொரென்டோ மிட்சைஸ் எஸ்யூவி காரும் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பல நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் தடுமாறி வரும் நிலையில், மிக குறுகிய காலத்தில் வர்த்தகத்தை ஸ்திரப்படுத்த சிறப்பான திட்டங்களுடன் முண்டாசு கட்டி களமிறங்கி உள்ளது கியா மோட்டார்.

Most Read Articles
English summary
South Korean auto manufacturer, Kia Motors are considering importing five new models for the Indian market. This includes two EVs (Soul & Niro) along with the Telluride, Sorento and their flagship sedan, the Stinger.
Story first published: Saturday, September 21, 2019, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X