மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் மிக சவாலான விலையில் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் மற்றும் கியா உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின் தேர்வுகள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மாடல்கள் விபரம்

கியா மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு விதமான மாடல்களில் வந்துள்ளது. இதில், ஜிடி லைன் மாடல் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் பெர்ஃபார்மென்ஸ் வகை மாடல் போன்ற டிசைன் அம்சங்களுடன் மிகவும் வசீகரமாக இருக்கிறது.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய கியா செல்டோஸ் காரின் டெக் லைன் மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். டெக் லைன் மாடலானது HTE, HTK,HTK+,HTX மற்றும் HTX+ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஜிடி லைன் மாடலானது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே இப்போது வந்துளளது. இந்த பெட்ரோல் மாடல் GTK,GTX,GTX+ ஆகிய 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எனினும், ஜிடி லைன் டீசல் மாடலானது விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 11.8 வினாடிகளில் எட்டும்.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் மாடல்

இந்த காரில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடலில் கிடைக்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 11.5 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

டர்போ பெட்ரோல் மாடல்

ஜிடி லைன் மாடலில் கொடுக்கப்பட இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 9.7 வினாடிகளில் எட்டிவிடும்.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

மைலேஜ் விபரம்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 16.3 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 17.8 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த காரின் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.2 கிமீ மைலேஜையும் வழங்க வல்லதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புற அம்சங்கள்

புதிய கியா செல்டோஸ் காரில் புலிமூக்கு வடிவிலான விசேஷ க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் அழகிய டிசைனிலான அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் இந்த காரின் வசீகரத்தை கூட்டுகின்றன.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இன்டீரியர்

புதிய கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்ளக்கூடிய யுவோ என்ற செயலி மூலமாக 37 விதமான தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இதர வசதிகள்

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் ஏர் ஃப்யூரிஃபயர் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள், 8 வித நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய கியா செல்டோஸ் காரில் 360 டிகிரி கேமரா, முன்புற, பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய கியா செல்டோஸ் கார் கிளேசியர் ஒயிட் பியர்ல், ஸ்டீல் சில்வர், கிராவிட்டி க்ரே, இன்டென்ஸ் ரெட், அரோரா பிளாக் பியர்ல், இன்டெலிஜென்சி புளூ, பன்ச்சி ஆரஞ்ச் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

உற்பத்தி திறன்

புதிய கியா செல்டோஸ் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இந்த நிலையில், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக டெலிவிரி கொடுப்பதற்கான உற்பத்தி திறனை கியா நிறுவனம் பெற்றிருக்கிறது. ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா மோட்டார்ஸ் ஆலையில் புதிய செல்டோஸ் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

விலை விபரம்

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், நிஸான் கிக்ஸ், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Kia Seltos launched in India. The Kia Seltos is available in two main trims: Tech-Line and GT-Line, which further offers sub-variants depending on the engine and gearbox specifications. The Kia Seltos is available with a starting price of Rs 9.69 lakh while the top-spec variant is priced at Rs 15.99 lakh. All prices are ex-showroom (India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X