புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய கியா செல்டோஸ் கார் மிக சவாலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

டெக் லைன் வேரியண்ட்டுகள் விபரம்

கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இதில், டெக் லைன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த டெக் லைன் மாடலானது HT E, HT K, HT K Plus, HT X மற்றும் HT X Plus ஆகிய 5 வேரேியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

ஜிடி லைன் வேரியண்ட்டுகள் விபரம்

ஜிடி லைன் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் மாடலும் விரைவில் வர இருக்கிறது. ஜிடி லைன் மாடலில் GT K, GT X மற்றும் GT X Plus ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டெக்லைன், ஜிடி லைன் மற்றும் கியர்பாக்ஸ், விலை அடிப்படையில் 16 விதமான தேர்வுகளில் புதிய கியா செல்டோஸ் கார் கிடைக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

HTE வேரியண்ட் விபரம்

செல்டோஸ் HT-E பெட்ரோல் வேரியண்ட் ரூ.9.69 லட்சத்திலும், டீசல் வேரியண்ட் ரூ.9.99 லட்சத்திலும் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்கிட் பிளேட்டுகள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மேனுவல் ஏசி சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், பவர் விண்டோஸ், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அதிகரிக்கும் வசதி, கீ லெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம், 3.8 அங்குல 2 டின் ஆடியோ சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

HTK வேரியண்ட் விபரம்

பெட்ரோல் வேரியண்ட் ரூ.9.99 லட்சத்திலும், டீசல் ரூ.11.19 லட்சத்திலும் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக புரொஜெக்டர் பனி விளக்குகள், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிசஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ரியர் வியூ கேமரா, 6 ஸ்பீக்கர்கள், டிவிட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

HTK Plus வேரியண்ட் விபரம்

HTK Plus பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.11.19 லட்சத்திலும், டீசல் மேனுவல் வேரியண்ட் ரூ.12.19 லட்சசத்திலும், டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.13.19 லட்சத்திலும் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 16 அங்குல ஹைப்பர் மெட்டாலிக் அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி சவுண்ட் மூட் லைட் சிஸ்டம், ரியர் டீஃபாகர் மற்றும் கார் எஞ்சினை நிறுத்தும்போது விளக்குகள் தானியங்கி முறையில் அணையும் ஆட்டோ லைட் கன்ட்ரோல் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

HTX வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.12.79 லட்சத்திலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ரூ.13.79 லட்சத்திலும், டீசல் மேனுவல் ரூ.13.79 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் சைலென்சர்கள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ ஸ்மார்ட்போன் செயலி, பீஜ் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம், லெதர் இருக்கைகள், ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, முழுமையான ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், பின்புற கதவு ஜன்னல்களுக்கான சன் ஷேடு மறைப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

HTX Plus வேரியண்ட் விபரம்

டீசலில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கிறது. இதுதான் டெக்லைன் மாடலின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாக வந்துள்ளது. டீசல் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.14.99 லட்சமும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.15.99 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்ட்டிலேட்டட் இருக்கைகள், 8 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சசார்கள், 7.0 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

GTK வேரியண்ட் விபரம்

ஜிடி லைன் மாடலின் விலை குறைவான வேரியண்ட் இதுதான். இதில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடலுக்கு ரூ.13.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், லெதர் உறை மற்றும் ஜிடி லைன் லோகோவுடன் ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. இதில், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்மார்ட் சாவியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட், சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகளுடன் கருப்பு வண்ண லெதர் இருக்கைகள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள், 17 அங்குல கிறிஸ்ட ல் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

GTX வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.14.99 லட்சத்திலும், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.15.99 லட்சத்திலும் வந்துள்ளது. இதில், கூடுதலாக சைடு மற்றும் கர்டெயின் வகை ஏர்பேக்குKள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், சிவப்பு வண்ண பிரேக் காலிபர்கள், மல்டி டிரைவ் மோடுகள், ஆட்டோமேட்டிக் மாடலில் மல்டி டிராக்ஷன் மோடுகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி, 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 7.0 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை உள்ளன. புற ஊதா கதிர்வீச்சை தடுக்கும் பூச்சுடன் ஜன்னல் கண்ணாடி, பீஜ் வண்ண லெதர் இருக்கைகளும் உள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

GTX Plus வேரியண்ட் விபரம்

இந்த வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் ரூ.15.99 லட்சத்தில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, போஸ் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், முன்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த வேரியண்ட்டில் விரைவில் டீசல் தேர்வும் வழங்கப்பட இருக்கிறது. மொத்தத்தில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான தேர்வுகளில் சிறப்பான மாடலாக கியா செல்டோஸ் வந்துள்ளது. நிச்சயம் வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்ற மாடலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Kia Motors have launched their first product in the Indian market, in the form of the Seltos SUV. The Kia Seltos is available in two main variants: Tech-Line and GT-Line. The base-spec variant of the Kia Seltos comes with a price tag of Rs 9.69 lakh while the top-spec variant is priced at Rs 15.99 lakh. All prices are ex-showroom (India).
Story first published: Friday, August 23, 2019, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X