புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

இந்த நிலையில், புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் இதனை தெரிவித்துள்ளது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 மற்றும் அல்டுராஸ் ஜி4 போன்ற முழுமையான 7 சீட்டர் மாடல்களை வைத்துள்ளது. ஆனால், புதிய எஸ்யூவி மாடலானது ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான விலையில் எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட குறைவான விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

அதன்படி, தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக அந்த புதிய மாடல் இருக்கும் என்பது தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் இந்த 7 சீட்டர் மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்யும் வாய்ப்புள்ளது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

எனினும், இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. அதன்பிறகே, ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது சாங்யாங் டிவோலி எக்ஸ்எல்வி எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் என்பது தெரிந்ததே. அதேபோன்று, சாங்யாங் டிவோலி எக்ஸ்எல்வி எஸ்யூவியின் மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய மாடலின் அடிப்படையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் வரலாம்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

பதிய மஹிந்திரா 7 சீட்டர்ர எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெறறிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலானது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் கூடுதல் விலையில் விற்பனைக்கு வரலாம். கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு சிறந்த மாற்றாகவும் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has confirmed launch of a new 7 seater SUV based on XUV300.
Story first published: Saturday, September 21, 2019, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X