மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முறையான ஆவணங்களை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாருதி கார் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக டீம் பிஎ

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

எம்பிவி ரக கார்களில் மாருதி எர்டிகா கார் சிறந்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில், 7 சீட்டர் மாடலான எர்டிகா காரில் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது திறன் குறைந்ததாக கருதப்படுகிறது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதிமுறை காரணமாக, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்துவதற்கு ஃபியட் முடிவு செய்துள்ளது. மேலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் விரும்பவில்லை.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

இது மாருதிக்கு நெருக்கடி தரும் விஷயமானது. மாருதி ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, சியாஸ் உள்ளிட்ட பல கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சொந்தமாகவே புதிய டீசல் எஞ்சினை மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் சியாஸ் காரில் அறிமுகமாகிறது. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா காரிலும் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முறையான ஆவணங்களை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாருதி கார் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

இதனால், சியாஸ் காரைத் தொடர்ந்து வெகுவிரைவில் மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் பெற்றது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், மாருதி உருவாக்கி இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். அதாவது, சற்று கூடுதல் திறன் வாய்ந்ததாக இருக்கும். அதிக எரிபொருள் சிக்கனத்தை கருதி, சக்தியை வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

மாருதி எர்டிகா காரின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் வரை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா கார் வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

மாருதி எர்டிகா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம்!

மேலும், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் அமோக ஆதரவை பெற்ற மாடலாக உள்ளது. இந்த நிலையில், அதிக எரிபொருள் சிக்கனம் வழங்கும் புதிய டீசல் எஞ்சின் இந்த காருக்கான வரவேற்பை எகிற செய்யும் என்று நம்பலாம்.

Source: Team BHP

Most Read Articles
English summary
According to the reports, all essential documents have already been sent to RTOs to get permits for registration. Deliveries of the Ertiga MPV with the new engines from the factory will begin shortly.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X