க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நிகரான புதிய எஸ்யூவி மாடலை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி சரியான பட்ஜெட்டில் சிறந்த மாடலாக வலம் வருகிறது. மேலும், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாகவும் வலம் வருகிறது. வலுவான சந்தையை மாருதி பிரெஸ்ஸா பெற்றிருந்தாலும், போட்டி மிக கடுமையாக இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இதனை மனதில் வைத்து அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடல் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட வடிவத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்பதை மாருதி நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயூகவா ஆட்டோகார் இந்தியா தளத்திடம் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

புதிய எஸ்யூவி மாடலானது 4.3 மீட்டர் நீளத்திற்கும் மேல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனினும், அடுத்த தலைமுறை மாடலாக உருப்பெறும் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான மாடலாகவே உருவாக்கப்படும்.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இந்த புதிய எஸ்யூவி மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், டீசல எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும்.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது 7 பேர் பயணிப்பதற்கு ஏதுவான இருக்கை வசதியுடன் வர இருப்பதாதக தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் நேரடியாக மோதும் விதத்தில் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட மேலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும். ரூ.12 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

க்ரெட்டாவுக்கு நிகரான புதிய எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எஸ்யூவி மாடலை மாருதி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் சந்தையை மாருதி நிறுவனம் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது. அதை போலவே, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மார்க்கெட்டை ஹூண்டாய் கட்டம் கட்டி புதிய மினி எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki is said to be working on an all-new SUV for the Indian market. The new SUV will be placed above the current Vitara Brezza offering and is expected to launch sometime in mid-2020.
Story first published: Tuesday, January 8, 2019, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X