பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

மாருதி சுசுகி சியாஸ் பிஎஸ்6 தரத்தில் பலேனோ மாடலின் அலாய் சக்கரங்களுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

மறைப்பு எதுவும் இன்றி இந்த சோதனை ஓட்டத்தில் இந்த கார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால் என்ஜினை தவிர்த்து வேறெந்த பாகமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த சோதனை ஓட்ட சியாஸ் காரில் 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜினை மாருதி நிறுவனம் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

இந்த என்ஜின் 89 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த பெட்ரோல் என்ஜின் டர்போசார்ஜரையும் கொண்டிருந்தால் இதன் பிரிவில் உள்ள மற்ற மாடல்களுடன் எளிதாக போட்டியிட முடியும். பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள இதன் போட்டி மாடல்களான ஹூண்டாய் வெர்னா மற்றும் சிட்டி கார்களில் சிறிய அளவில் ஃபேஸ்லிஃப்ட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளதால் 2020 மாருதி சியாஸிலும் முன்புற டிசைன் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

மாருதி நிறுவனம் சியாஸ் மாடலில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1.5 லிட்டர் கே15பி நான்கு-சிலிண்டர் அமைப்பை கொண்ட எஸ்எச்விஎஸ் பெட்ரோல் என்ஜினை பொருத்தியிருந்தது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் 104.7 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

அதன்பின் 2019 துவக்கத்தில் 1.5 லிட்டர் டிடிஐஎஸ் 225 நான்-எஸ்எச்விஎஸ் டீசல் என்ஜின் தேர்வை கூடுதலாக வழங்கியது. இந்த டீசல் என்ஜின் 95 பிஎச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. அதன் பின் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 எஸ்எச்விஎஸ் டீசல் என்ஜினையும் வழங்கியது.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

மாருதி நிறுவனத்தில் இருந்து இதுவரை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள எர்டிகா, எக்ஸ்எல்6 உள்ளிட்ட அனைத்து கார்களும் 1.5 லிட்டர் மில்டு ஹைப்ரீடு பெட்ரோல் என்ஜினை தான் பெற்றுள்ளன. இதனால் பிஎஸ்6 தரத்தில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாருதி சியாஸ் காரில் பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டும் தான் இருக்கும். பிஎஸ்6 கார்களின் டீசல் வேரியண்ட்களை வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தயாரிக்க மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

ஆசியாவில் எஸ்எக்ஸ்4 மாடலுக்கு மாற்றாக சி-பிரிவில் அறிமுகமான மாருதி சியாஸ், சில மாதங்களுக்கு முன்பு, 2.7 லட்சம் விற்பனை என்கிற மைல்கல்லை இந்திய மார்க்கெட்டில் அடைந்ததாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்திருந்தது. குறிப்பாக கடந்த பொருளாதார ஆண்டில் மட்டும் விற்பனையான மாருதி சுசுகி சியாஸ் மாடலின் எண்ணிக்கை 46,000 ஆகும்.

பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...

சியாஸ் மாடலுக்கு இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள வரவேற்பால் இதன் பிஎஸ்6 வெர்சனின் விற்பனையில் எந்த தடுமாற்றமும் இருக்காது. மாருதி சியாஸ் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.2 லட்சத்தில் இருந்து ரூ,11.38 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Ciaz Spotted On Test With Balenos Alloy Wheels
Story first published: Saturday, December 7, 2019, 19:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X