புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

புதிய டீசல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

எஸ்யூவி மார்க்கெட்டில் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. சராசரியாக மாதத்திற்கு 12,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகின்றன. இந்தநிலையில், டாடா நெக்ஸான் மற்றும் அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி ஆகிய கார்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

இந்த நெருக்கடியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர்களுடன் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பானட்டில் ஏர்ஸ்கூப் உள்ளிட்ட புதிய அம்சங்களும் இடம்பெற இருக்கின்றன. உட்புறத்தில் புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

இவற்றை தவிர்த்து, புதிய டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார். தற்போது ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

இந்த நிலையில், மாருதி நிறுவனம் சொந்தமாக உருவாக்கியிருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

புதிய மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருக்கிறது. மேலும், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த எஞ்சின் லிட்டருக்கு 24.29 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் மாடலாக உள்ளது.

புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி!

இந்தநிலையில், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சற்று கூடுதல் சக்திவாய்ந்ததாக இருப்பதுடன், இதே அளவுக்கு மைலேஜை வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களின் ஆதரவு மேலும் பெருகும் என்று மாருதி சுஸுகி கருதுகிறது.

Source: Carwale

Most Read Articles
English summary
Maruti Suzuki is planning to bring in the 2019 Vitara Brezza facelift to the Indian market soon. The new Maruti Vitara Brezza facelift is expected to launch in India in the coming months, with production already having started at the facility.
Story first published: Thursday, March 21, 2019, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X