மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் துவங்கி இருக்கின்றன. அதன் ஸ்பை படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது. ஆனால், ஹூண்டாய் வெனியூ வந்த பின்னர் நிலைமை மாறிவிட்டது. விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது. இதையடுத்து, விட்டாரா பிரெஸ்ஸாவின் மார்க்கெட்டை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மாருதி சுஸகி எடுத்து வருகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் வெனியூ நெருக்கடி ஒருபுறமும், புதிய மாசு உமிழ்வு விதிகள் மறுபுறமும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனை சமாளிக்கும் விதத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய மாடலானது தற்போது சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருந்தாலும், சில புதிய விஷயங்களை காண முடிகிறது. புதிய புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. புதிய அலாய் சக்கரங்களும் இடம்பெறுகின்றன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. டெயில் லைட்டுகளின் டிசைனில் கூட பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. புதிய ரியர் ஸ்பாய்லர் இடம்பெற்றுள்ளது. சிறிய அளவிலான மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கலாம். தற்போதைய மாடலைவிட மிக பிரிமீயமாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் தற்போது பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விடை கொடுக்கப்படுகிறது. மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

இதில் இடம்பெற இருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பிரேக் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம், டார்க் அசிஸ்ட் சிஸ்டம் ஆகிவை இடம்பெறும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்!

இந்த ஆண்டு இறுதியில் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Spy Images Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti Suzuki India Limited (MSIL) has started testing their popular compact-SUV, the Vitara Brezza. The upcoming version of the Vitara Brezza was spotted testing on Indian roads ahead of its expected launch by December 2019.
Story first published: Saturday, September 21, 2019, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X