மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

கடந்த ஆண்டு செப்டம்பரில் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதன் சக்திவாய்ந்த ஏஎம்ஜி மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் இறங்கி இருக்கிறது. சாதாரண சி க்ளாஸ் சொகுசு காரைவிட அதிக வசீகரத்தை தரும் வகையில் ஏஎம்ஜி பிராண்டின் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

டிசைன் அம்சங்கள்

முன்புறத்தில் இரட்டை பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பின் நடுவில்மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ நடுநாயகமாக வீற்றிருக்கிறது. பகல்நேர விளக்குகளுடன் கூடிய மல்டி பீம் எல்இடி ஹெட்லைட் அமைப்பு, ஸ்பிளிட்டர்கள், பெரிய டிஃப்யூசர் அமைப்புடன் முகப்பு வசீகரமாக உள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

பனோரமிக் சன்ரூஃப், கூபே கார்களுக்குரிய பின்புறமாக தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பு, அகலமான பாடி ஸ்கர்ட் சட்டங்கள், 19 அங்குல அளவிலான பிரம்மாண்ட அலாய் வீல்கள் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன. இந்த காரில் 2+2 என்ற இருக்கை அமைப்பு உள்ளது. 4 பேர் செல்ல முடியும். இந்த காரில் 400 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

இன்டீரியர்

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரில் 10.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 12.3 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய அர்டிகோ லெதர் கவருடன் ஏஎம்ஜி பிராண்டின் பிரத்யேகமான ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

சக்திவாய்ந்த எஞ்சின்

ஏஎம்ஜி பிராண்டில் சி43 வரிசை மாடல்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 385 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலைவிட இந்த பெட்ரோல் எஞ்சின் கூடுதலாக 23 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் சக்திவாய்ந்த மாடலாக மாறி இருக்கிறது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

கியர்பாக்ஸ்

இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விசேஷமான 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இதில், 31 சதவீத எஞ்சின் சக்தி முன்சக்கரங்களுக்கும், 69 சதவீத எஞ்சின் டார்க் திறன் பின்சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

செயல்திறன்

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருந்தாலும், இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 5 விதமான டிரைவிங் மோடுகளும், சஸ்பென்ஷனை மூன்று விதமான நிலைகளில் மாற்றிக் கொள்வதற்கான ரைடு கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

விலை விபரம்

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே கார் ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.68,000 கூடுதலாக செலுத்தினால் 2 ஆண்டுகளுக்கான பராமரிப்பு திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிஎம்டபிள்யூ எம்2 காம்படிசன் மாடலுக்கு போட்டியாக வந்துள்ளது. இந்த கார் ரூ.79.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
German luxury carmaker Mercedes has launched the AMG C43 Coupe in India. The Mercedes-AMG C43 Coupe is priced at Rs 75 lakh ex-showroom (India) and is the first AMG 43 series coupe model introduced by Mercedes in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X