மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம் கொடுத்துள்ளது. அதன் படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

கடந்த வாரம் புனே நகரில் மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்களுக்கான கூட்டத்தில் இந்த புதிய ஜிஎல்இ எஸ்யூவியின் லாங் வீல் பேஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

இந்த புதிய சொகுசு ரக எஸ்யூவி கார் இந்தியாவில் ஜிஎல்இ 300டீ எக்ஸ்க்ளூசிவ், ஜிஎல்இ 400டீ எலைட் மற்றும் ஜிஎல்இ 450 எலைட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வசதிகளுக்கு தக்கவாறு விலை நிர்ணயிக்கப்படும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

இந்த புதிய காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு 19 அங்குலம் மற்றும் 20 அங்குல சக்கரங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து தேர்வு செய்து கொள்ள முடியும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

ஏர் சஸ்பென்ஷன் பனோரமிக் சன்ரூஃப், 4 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 64 விதமான வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன் லைட் சிஸ்டம் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

இந்த காரில் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் பின் இருக்கைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் மிக சொகுசான அம்சங்களை இந்த எஸ்யூவி வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

புதிய ஜிஎல்இ 300டீ மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 241 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும். ஜிஎல்இ 400டீ மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது.இந்த எஞ்சின் 326 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லாங்வீல் பேஸ் மாடல் இந்தியாவில் ரகசிய தரிசனம்!

அடுத்து ஜிஎல்இ 450 டீசல் மாடல் 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அனைத்து எஞ்சின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ரூ.70 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team BHP

Most Read Articles
English summary
Mercedes-Benz has showcased the new GLE in a dealers meet held in Pune last week.
Story first published: Monday, November 25, 2019, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X