மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரின் புதிய மாடல் சென்னையில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஜனவரி மாதம் மெர்சிடிஸ் நிறுவனம் தனது வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட்டால் வேறு சிறந்த எம்பிவி இல்லை என்ற குறையை போக்கும் விதத்தில் இந்த புதிய மாடல் அமைந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் எக்ஸ்பிரெஸன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், எக்ஸ்பிரஸன் வேரியண்ட்டிற்கு ரூ.68.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.81.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலை தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய மாடல் வி க்ளாஸ் எலைட் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலிலிருந்து இது சிறிய அளவிலான டிசைன் வேறுபாடுகளை பெற்றிருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் கவர்கிறது. உட்புறத்திலும் கூடுதல் அலங்கார அம்சங்கள், புதிய ஏசி வென்ட்டுகள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

நப்பா லெதர் இன்டீரியர், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு என பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் காரில் மிக முக்கிய மாற்றமாக புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது முக்கியமான விஷயமாக கூறலாம். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் பார்க்கிங் சிஸ்டம், க்ராஸ் விண்ட் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடலுக்கு ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதலாம்.

Most Read Articles
English summary
German luxury car maker Mercedes Benz has launched V Class Elite variant in India.
Story first published: Thursday, November 7, 2019, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X