அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவின் செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய கார் சந்தையில் கால் பதித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரில் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின்மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரின் லித்தியம் அயான் பேட்டரியை 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண 7.4kW வீட்டு சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7 மணிநேரம் பிடிக்கும். குறிப்பிட்ட டீலர்களில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் நிறுவப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

அலையன்ஸ் நடமாடும் சார்ஜ் ஏற்றும் நிலையத்தின் மூலமாக சார்ஜ் செய்ய முடியும். வரும் ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 5 கிமீ தூரத்தற்கு ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையமும், நெடுஞ்சாலைகளிலும் 25 கிமீ தூரத்திற்கு ஒரு பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்துடன் கட்டமைப்பை ஏற்படுத்த எம்ஜி திட்டமிட்டுள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இதன் பேட்டரி தண்ணீர் புகாத சிறப்பான உறை அமைப்பை பெற்றிருக்கிறது. எனவே, மழைக்காலங்களில் இதன் பேட்டரியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று எம்ஜி உறுதி தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெப்ப நிலை 50 டிகிரி வரை செல்லும் என்பதால், அதற்கு தக்கவாறு இதன் பேட்டரி மற்றும் மின் மோட்டார்களுக்கான குளிர்விப்பு அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் வைத்து ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த கார் சிறப்பான செயல்திறனை வழங்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள், ஸ்கை ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் கூரையின் 90 சதவீதம் அளவுக்கு கண்ணாடி கூரை அமைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று சுத்திகரிப்புக்காக பிரத்யேக ஏர் ஃபில்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஐ-ஸ்மார்ட் என்ற பிரத்யேக செயலி மூலமாக பல்வேறு தகவல்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற முடியும். ஸ்மார்ட்ஃபோன் மூலமாக ரிமோட் முறையில் காரின் சில வசதிகளை கட்டுப்படுத்த முடியும். இந்த காரில் ஏர்டெல் சிம்கார்டு மூலமாக நேரடி இணைய வசதி கொடுக்கப்படுகிறது.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு குஜராத்தில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். முதல்கட்டமாக டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கறது. இதைத்தொடர்ந்து, பிற நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும்.

அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ரூ.22 லட்சம் விலையில் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. ஹூண்டாய் கோனா காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
British car maker, MG Motor has unveiled of its ZS electric car in India.
Story first published: Thursday, December 5, 2019, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X