அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய கார்களுக்கான புதிய டயர்களை மிச்செலின் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடந்த இதற்கான விழாவிலிருந்து முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

இந்தியாவில் கார்களுக்கான டயர் விற்பனை சந்தையில் மிச்செலின் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. மிச்செலின் டயர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிக சிறப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கார் டயர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மிச்செலின்.

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

இதுவரையில் விற்பனையில் இருந்த மிச்செலின் XM2 வரிசை கார் டயர்களுக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்ட இந்த புதிய எனெர்ஜி XM2+ டயர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

இந்த புதிய டயர்கள் நீடித்த உழைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான நிறுத்துதல் திறனை கார்களுக்கு வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, சந்தையில் இதன் ரகத்திலான டயர்களை ஒப்பிடும்போது 29 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

இந்த டயர்களில் புதிய கலவை மற்றும் கட்டுமானத்திலான ரப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தேய்மானமும் குறைவாக இருக்கும் என்று மிச்செலின் தெரிவித்துள்ளது. இதனால், நீண்ட காலம் உழைக்கும் வாய்ப்பை வழங்கும்.

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

சரியாக பிரேக் பிடித்தால், இந்த புதிய டயர்கள் 2.4 மீட்டருக்குள் காரை நிறுத்திவிடும் என்றும், தேய்மானம் அடைந்த பின்னர் கூட 3.3 மீட்டருக்குள் காரை நிறுத்தும் திறனை வழங்கும் என்றும் மிச்செலின் தெரிவிக்கிறது. அதாவது, ஈரப்பதமான சாலை நிலைகளிலேயே இந்த அளவு நிறுத்துதல் திறனை வழங்குமாம்.

MOST READ: டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

இதுகுறித்து மிச்செலின் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மோகன் குமார் கூறுகையில்," கடந்த 8 ஆண்டுகளாக மார்க்கெட்டில் மிச்செலின் எக்ஸ்எம்2 டயர்கள் முதன்மையாக இருந்து வந்தன. அதைவிட புதிய எக்ஸ்எம்2 ப்ளஸ் டயர்கள் மிகச் சிறந்த அம்சங்களுடன் தினசரி பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

MOST READ: திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

நிறுவனத்தின் சார்பில் டயர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஆயுட்காலம் முழுமைக்கும் இந்த புதிய டயர்கள் மிகுந்த பாதுகாப்பையும், செயல்திறனையும் வழங்க வல்லதாக இருக்கும் ," என்று தெரிவித்துள்ளார்.

MOST READ: காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்

அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!

மிச்செலின் நிறுவனத்தின் புதிய எனெர்ஜி எக்ஸ்எம்2 ப்ளஸ் டயர்கள் மொத்தம் 30 விதமான அளவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி மற்றும் எம்யூவி வகை கார்களுக்கு தகுந்த அளவுகளில் இவை கிடைக்கும். மிச்செலின் எனெர்ஜி எக்ஸ்எம்2 ப்ளஸ் டயர்கள் ரூ.5,090 விலையிலிருந்து ஆரம்பமாகின்றது.

Most Read Articles

English summary
Michelin India has launched a new range of car tyres in the market, called the Energy XM2+. The new Michelin Energy XM2+ range of tyres are offered with a starting price of Rs 5,090.
Story first published: Monday, December 16, 2019, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X