Just In
- 27 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 41 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 57 min ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
தூய்மை பணியாளர் முத்துமாரிக்கு தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Movies
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதற்குதான் மோடி அரசு புதிய வாகன சட்டத்தை கொண்டுவந்ததா..? கடும் சரிவில் எரிபொருள் விற்பனை!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தால், எரிபொருள் விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

இந்தியா என்னதான் எரிபொருளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தாலும், அதன் பெருமளவிலான எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளையே நம்பியுள்ளது.
அவ்வாறு, கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ய ஈரான், அரபு உள்ளிட்ட நாடுகளையே அது நாடுகின்றது. மேலும், அது ஒவ்வொரு முறையும் எரிபொருளை இறக்குமதி செய்யும்போது பெருமளவிலான பொருட்செலவை எதிர்கொள்கின்றது.

ஆகையால், இதனை தவிர்க்கும் விதமாக, எரிபொருள் பயன்பாட்டை கணிசமாக குறைக்கின்ற முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதேசமயம், ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயுக்களை இந்தியாவின் நிலங்களில் இருந்தே உறிஞ்சி எடுக்கும் முயற்சியையும் அது செய்து வருகின்றது.

இதற்காக நாடு முழுவதும்30க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
இதில், சில பகுதிகளில் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில், நெடுவாசல் போன்ற சில இடங்களில் போராட்டம் காரணமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எரிபொருள் விவகாரத்தில் இந்தியா பல்வேறு சிக்கலைச் சந்தித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, நாள்தோறும் அதிகரித்து வரும் எரிபொருள் வாகனங்களாலும் பல்வேறு பின்விளைவுகளை எதிர்கொள்கின்றது. முக்கியமாக, டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு புகை, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கின்றது.

ஆகையால், இவையனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக, எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்துவிட்டு, அவற்றிற்கு மாற்றாக மின் வாகனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், வாகன அடர்த்தி காரணமாக உருவாகியுள்ள, போக்குவரத்து விதிமீறல் என்னும் தலைவலிக்கு தீர்வு காணும் விதமாகவும் மத்திய அரசு பலே திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அந்தவகையில், பன்மடங்கு உயர்த்தப்பட்ட புதிய அபராத திட்டத்தை அண்மையில் அது அறிமுகப்படுத்தியது.

கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த இத்திட்டம், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய களோபரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் உச்சபட்ச அபராதத் தொகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அந்தவகையில், சமீபலகாலமாக அபராதம் குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் தலைப்பு செய்திகளாக மாறுகின்ற வகையில் உள்ளன. அவ்வாறு, கடந்த 3ம் தேதி விதிமீறலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு உச்சபட்சமாக ரூ. 88 ஆயிரத்திற்கான அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், ஒரு விதமான குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகனங்களை இயக்குவதை தவிர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா மாநிலத்தில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை பெருமளவில் குறைந்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு, பொதுமக்கள் மத்தியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்பட்ட தாக்கமே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றது. ஏனெனில், சிறு தவறு என்றாலும், வட்டிக்கு கடன் வாங்கி கொடுக்கின்ற வகையில் புதிய அபராதத் திட்டம் இருக்கின்றது. இதுவும் மக்களின் இத்தகைய நிலைக்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், மக்கள் தங்களது சொந்த வாகனங்களைக் காட்டிலும் பொது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையே அதிக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்களின் இந்த நடவடிக்கையால், ஒடிசாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்களின் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
அந்தவகையில், பெட்ரோல் விற்பனை நாள் ஒன்றிற்கு 4,08,000 லிட்டர் சரிவையும், டீசல் விற்பனை நாள் ஒன்றிற்கு 12,45,000 லிட்டர் சரிவையையும் பெற்றுள்ளது.

வாகன விற்பனைச் சரிவைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைச் சரிவும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவால் ஒடிசா மாநிலத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதில் நாள் ஒன்றிற்கு மட்டும் பெட்ரோல் விற்பனைச் சரிவால் ரூ. 58 லட்சத்தில் இருந்து ரூ. 81 லட்சம் வரையிலும், டீசல் விற்பனைச் சரிவால் ரூ. 1,78,00,000 கோடி ரூபாய் இழப்பையும் சந்தித்திருப்பதாக அம்மாநில எரிபொருள் விநியோகஸ்தர் சங்கம் கூறியுள்ளது.