மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் விஷயத்தில் தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம்தான் தற்போது இந்தியா முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1ம் முதல் அமலுக்கு வந்தன. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு விதமான விமர்சனங்களும் சரி சமசமாக வந்து கொண்டிருந்தன. ஆனால் நாளாக நாளாக எதிர்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றுக்கு 1.41 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு, இந்தியாவில் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இதுதான். இதுபோல் பல்வேறு வாகனங்களுக்கும் பல்லாயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் வாகன ஓட்டிகள் மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

ஆரம்பத்தில் மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதன்பின் பாஜக ஆளும் குஜராத் மாநில அரசே அதிகபட்ச அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் தற்போது போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் குஜராத்தில் இது தற்போது 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தாலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதனையும் குஜராத் அரசு 500 ரூபாயாக குறைத்துள்ளது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் குஜராத் அரசு இதனை டூவீலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாகவும், மற்ற வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளது. இதேபோல் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் குஜராத் அரசு குறைத்துள்ளது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

மேற்கண்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது கேரளாவும் இணைந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களை போல், குறிப்பாக குஜராத்தை போல் அபராதத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா? என தமிழக வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

அவர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது தற்போதைக்கு விதிக்க வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

அபராத தொகைகள் மிக கடுமையாக இருப்பதால், அதனை குறைக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் சிலர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பச்சை கொடி காட்டி விட்டதால், குஜராத்தை போல் தமிழக அரசும் அபராத தொகைகளை அதிரடியாக குறைக்கவுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

இதற்காக ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை தமிழக அரசு அடுத்த வாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் தற்போது மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஒடிசா, ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் மீது போலீசார் தற்போது வரை பெரிதாக கெடுபிடி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழக அரசின் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
English summary
New Motor Vehicle Act: Tamil Nadu Government Decided To Reduce Traffic Violations Fine. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X