நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரெனோ தனது அடுத்த தயாரிப்பாக நியூ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. மேலும் இதன் விலையை ரூ.2.83 லட்சமாகவும் அந்நிறுவனம் நிர்ணயத்துள்ளது.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

ரெனோ க்விட்டின் இந்த புதிய மாடல் பழைய க்விட் காரில் இருந்து டிசைன், பரிமாண வேறுபாடு மற்றும் பல சிறப்பம்சங்களில் வேறுப்பட்டுள்ளது. இருந்தாலும் இரண்டின் இன்ஜின் தரத்தையும் ஒரே மாதிரியாகவே ரெனோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

இந்த இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியாக 800சிசி இரு பெட்ரோல் என்ஜின் அமைப்பை கொண்டுள்ளன. ஒரு என்ஜின் 55 பிஎச்பி பவரையும் 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு 1 லிட்டர் என்ஜின் 68 பிஎச்பி பவர் மற்றும் 91 டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

அதேபோல் இரு என்ஜின்களும் ஒரே மாதிரியாக நிலையான மேனுவல் 5 நிலை வேக கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 1 லிட்டர் என்ஜினுடன் கூடுதலாக ஆட்டோமெடிக் கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

இந்நிலையில் இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

டிசைன்

நியூ ரெனோ க்விட்டில் புதுவிதமான டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பருக்கு அடியில் அப்டேட்டான ஹெட்லடைட் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் புறத்தில் பகல் நேரத்திலும் ஒளிர கூடிய விளக்குகள் உள்ளன.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

க்ரில்லும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பழைய மாடலில் மெல்லியதாக இருந்த க்ரில் நியூ மாடலில் தடிமனாக உள்ளது. பம்பர் பொருத்தப்படும் பகுதியும் மாறுதலாக ஏர்இண்டேக்கிற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. காரின் கலரும் கருப்பு நிறத்தில் பார்க்க மொரட்டு தனமான லுக்கில் உள்ளது.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

காரின் கதவுகளுக்கு அடிப்பகுதியில் மிக கருமையான நிறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கரங்களில் அப்டேட்டாக ஸ்டீல்களில் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இது காரை இன்னும் ஸ்டைலாக காட்டுகிறது. பின்புறத்தில் இருக்கும் எல்இடி விளக்குகள் C- வடிவிலும் பம்பர் ரியர் ஸ்கஃப் தட்டுகளாகவும் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

உட்புற அம்சங்கள்

காரின் உட்புறத்தில் பார்த்தால் நியூ க்விட்டில் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு நிறத்திலான தொடுதிரை சாதனம், அப்டேட்டான சென்ட்ரல் கன்சோல், பியானோ-பிளாக் நிறத்தில் ட்ரீம்ஸ் போன்றவை உள்ளன.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

தொடுதிரை 7 இன்ச்சில் இருந்து 8 இன்ச்சாக மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமெண்ட் க்ளூஸ்டரும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ட்ரைபர் மாடல் காரில் உள்ளது போல் நியூ ஸ்டீயரிங். பாடல்களை ஸ்டீயரிங் மூலமே மாற்றக்கூடிய அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் இருக்கைகள் ஃபேப்ரிக் துணிகளால் மூடப்பட்டுள்ளன.

நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

தோற்றம்

இந்த நியூ க்விட் ஃபேஸ்லிஃப்ட் பழைய மாடலை விட உயரம் மற்றும் நீளத்தில் சற்று பெரியதாக உள்ளது. ஆனால் சக்கரத்தின் அளவு மற்றும் அகலத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டு மாடலுக்கும் இடையேயான அளவு வேறுபாடுகள் மில்லிமீட்டரில் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

Dimensions New Renault Kwid

Old Renault Kwid

Length (mm) 3731 3679
Width (mm) 1579 1579
Height (mm) 1490 1478
Wheelbase (mm) 2422 2422
Ground Clearance (mm) 184 180
Boot Space (litres) 279 300
நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

விலை

நியூ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை அப்டேட்களால் பழைய மாடலை விட சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் பழைய மாடல் ரூ.2.76 லட்சத்திற்கும் புது மாடல் ரூ.2.83 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. இவ்விரு மாடல்களின் வேரியண்ட்களின் விலைகள் கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

Variant New Renault Kwid

Old Renault Kwid

STD 0.8L Rs 2.83 Lakh Rs 2.76 Lakh
RXE 0.8L Rs 3.53 Lakh Rs 3.31 Lakh
RXL 0.8L Rs 3.83 Lakh Rs 3.62 Lakh
RXT 0.8L Rs 4.13 Lakh NA
RXT 1.0L Rs 4.33 Lakh NA
RXT 1.0L EASY-R Rs 4.63 Lakh Rs 4.51 Lakh
CLIMBER MT Rs 4.54 Lakh Rs 4.46 Lakh
CLIMBER EASY-R Rs 4.84 Lakh Rs 4.76 Lakh
நியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன

ரெனோ நிறுவனம் நியூ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டில் பல அப்டேட்களை செய்துள்ளது. பழைய மாடல் மார்கெட்டில் நல்ல விதத்தில் விற்பனையானது. ஆதலால் தான் இந்த புது மாடல் இன்னும் அதிகம் வாடிக்கையாளர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்கு தோற்றத்தில் பல சிறப்பம்சங்களை ரெனோ நிறுவனம் செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
New Renault Kwid Vs Old Kwid: Here Are All The Major Differences Between Them
Story first published: Tuesday, October 1, 2019, 19:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X