புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. தயாரிப்பு நிலைக்கு மேம்பட்டிருக்கும் இந்த கார் பற்றி ஓரளவு கணிக்கக்கூடிய அளவில் இந்த படங்கள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் விபரங்களை பார்க்கலாம்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில்தான் புதிய ரெனோ ட்ரைபர் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோ மூலமாக காரின் முழுத்தோற்றத்தையும் கணிக்கக்கூடிய வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே மினி எம்பிவி ரகத்தில் சொல்லப்பட்டாலும், இது வடிவமைப்பில் முழுமையான எம்பிவி கார் போன்ற தோற்றத்தை பெற்றிருப்பது சிறப்பு. ஏனெனில், டட்சன் கோ ப்ளஸ் கார் பெரிய ஹேட்ச்பேக் போலத்தான் இருக்கும். ஆனால், இது சற்றே முழுமையான எம்பிவி கார் போலவே தோற்றமளிக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் புதிய ட்ரைபர் எம்பிவி காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், முன்புற வடிவமைப்பில் ரெனோ க்விட் சாயல் தென்படுகிறது. ஆனால், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் நீளம் அதிகரிக்கப்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால் ரெனோ க்விட் அடிப்படையிலான மாடல் என்பதை காண முடியவில்லை.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

அத்துடன், புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் மாடலானது புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். தவிரவும், ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் ரியர் விண்ட்ஷீல்டு வைப்பர், சிறிய ஸ்பாய்லர் மற்றும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. புதிய டேஷ்போர்டு அமைப்பு, இரட்டை வண்ண இன்டீரியர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த கார் 7 பேர் பயணிப்பதற்கு ஏற்ற இருக்கை வசதியை பெற்றிருக்கும். மேலும், மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றி மாட்டும் வசதியுடன் வருகிறது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

எஞ்சின் விபரம் குறித்து சரியானத் தகவல் இல்லை. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் உறுதி செய்யப்படாத தகவல்கள்தான் இதுவரை உள்ளது.

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவியின் புதிய ஸ்பை படங்கள்!

வரும் ஜூன் மாதத்தில் இந்த புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் 7 சீட்டர் மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது.

Spy Images Source - 1, 2

Most Read Articles
மேலும்... #ரினால்ட்
English summary
Renault is working on introducing a new MPV in the Indian market. The new Renault MPV officially named, the Triber is expected to go on sale in the Indian market sometime later this year.
Story first published: Tuesday, April 16, 2019, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X