புதிய ஸ்கோடா ரேபிட் காரின் அதிகாரப்பூர்வ உருவரை படம் வெளியீடு!

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் அதிகாரப்பூர்வ உருவரை படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த படத்தையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் செடான் பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் மற்றும் சேவை தரத்தில் உள்ள குறைபாடுகளால் போதிய விற்பனையை பெற முடியாமல் திணறி வருகிறது.

சிறந்த கார் மாடலாக இருந்தாலும் விற்பனையில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் புதிய வர்த்தக கொள்கைகளை செயல்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதன்படி, பல புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த பட்டியலில் புதிய ஸ்கோடா ரேபிட் செடான் காரும் உள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்கெட்ச் வெளியீடு!

தற்போது உருவாக்கப்ப பணிகளில் இருக்கும் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் உருவரை படம் ஒன்று அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், புதிய ரேபிட் கார் டிசைன் முற்றிலும் புதிய முறையில் மாற இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. வழக்கம்போல் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் முற்றிலும் புதிய தோற்றத்தில் ரேபிட் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய தலைமுறை சூப்பர்ப் காரின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய ரேபிட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதை இந்த உருவரை படம் மூலமாக தெரிகிறது. புதிய எல்இடி ஹெட்லைட் , க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், கூரை அமைப்பு என அசத்துகிறது. ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் அடுத்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto hase released official sketch of new generation Rapid sedan, which is expected to arrive in India by 2021.
Story first published: Thursday, October 10, 2019, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X