புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

மிரட்டலான பாடி கிட் மற்றும் சிறப்பு ஆக்சஸெரீகளுடன் வசீகரிக்கும் புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் மாடல் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி பிராண்டில் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் சிறப்புகள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எர்டிகா காரில் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளை கொடுத்து தோற்றத்தை மிரட்டலாக மாற்றி இருக்கின்றனர் சுஸுகி நிறுவனத்தின் பொறியாளர்கள். அசத்தலான பம்பர் அமைப்பு காரின் தோற்றத்தை வேற லெவலுக்கு மாற்றி காட்டுகிறது.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பெரிய பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்கள். பக்கவாட்டில் பாடி ஸ்கர்ட் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிபன்புறத்தில் ஸ்பாய்லர் அமைப்பு, ஜிடி பேட்ஜ் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இடம்பெற்றுள்ளன.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் காரின் இன்டீரியரிலும் சில மாற்றங்கள் தெரிகின்றன. டேஷ்போர்டு, கதவுகளில் அலங்கார மரத்தகடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண லெதர் இருக்கைகளும் இதனை பிரிமீயம் மாடலாக காட்டுகிறது.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சைடு மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் முறையில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியாவில் அறிமுகம்!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் இரண்டாம் தலைமுறை எர்டிகா காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.475 பிஎஸ் பவரையும்,138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தோனேஷியாவில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லை.

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் கார் மாடல் மாருதி பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் 95 பிஎஸ் பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
New Suzuki Ertiga Sport debuts in Indonesia.
Story first published: Friday, March 22, 2019, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X