Just In
- 49 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாடா எச்2எக்ஸ் பட்ஜெட் எஸ்யூவி பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!
ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்ப்ட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச்2எக்ஸ் பட்ஜெட் எஸ்யூவியின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
பிளாட்ஃபார்ம்
டாடா எச்2எக்ஸ் எஸ்யூவியானது அந்நிறுவனத்தின் புதிய அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் அனைத்து புதிய கார் மாடல்களுடன் 5 நட்த்திர பாதுகாப்பு தரத்தை பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் ஹார்ன்பில் என்ற பெயரில் வர இருக்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்
இந்த புதிய பட்ஜெட் எஸ்யூவி 5 நட்சத்திர பாதுகாப்பு தரத்திற்கு ஏற்ற கட்டமைப்பு மற்றும் உதிரிபாகங்களை பெற்றிருக்கும். அதேபோன்று, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரல், ரியர் டீஃபாகர் உள்ளிட்ட அம்சங்களையும் பெற்றிருக்கும்.
இதர பாதுகாப்பு அம்சங்கங்கள்
இரவு நேரத்தில் ஓட்டுனருக்கு கண் கூச்சத்தை தவிர்க்கும் விசேஷமான ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் மற்றும் வீட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கும்போது சிறிது நேரம் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் ஹோம் மீ ஹெட்லைட்டுகளும் இடம்பெற்றிருக்கும்.
எஞ்சின் விபரம்
டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த மினி எஸ்யூவி மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர அம்சத்தை பெற்றிருக்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.
டீசல் எஞ்சின் ஆப்ஷன்?
டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சினை விலக்கிக் கொள்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. எனவே, இந்த புதிய எஸ்யூவி மாடலானது டீசல் எஞ்சின் தேர்வில் வருவது சந்தேகமாகி இருக்கிறது.
மின்சார மாடல்
இந்த கார் டீசல் மாடலில் வராவிட்டாலும், ஹைப்ரிட் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு போட்டியாளராக கருதப்படும் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் வர இருப்பதால், டாடாவும் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
எப்போது அறிமுகம்?
புதிய டாடா எச்2எக்ஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன்னதாக சந்தையில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் விலை
புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவியானது ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருப்பதுடன், சில ஹேட்ச்பேக் கார்களுக்கும் விலை அடிப்படையில் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!