கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா ஹெக்ஸா கார் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா ஹெக்ஸா கார் அறிமுகம்!

கடந்த மாதம் புத்தம் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே விலை ரகத்தில் வந்த ஹாரியர் எஸ்யூவியானது ஹெக்ஸா காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை உணர்ந்துகொண்டு, ஹெக்ஸா காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்தது.

எனினும், அதற்கு போதிய பலன் கிடைக்காது என்று கருதி இப்போது ஹெக்ஸா காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து களமிறக்கி இருக்கிறது. தோற்றத்தில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய ஹெக்ஸா மாடல் வந்துள்ளது.

புதிய இரட்டை வண்ணக் கலவைகளில் டாடா ஹெக்ஸா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஃபினிட்டி பிளாக் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய இரண்டு விதமான கூரை வண்ணங்களில் கிடைக்கும். இதில், டைட்டானியம் க்ரே வண்ணத்திலான கூரை அமைப்பு அரிஸோனா புளூ, அர்பன் பிரான்ஸ் மற்றும் ஸ்கை க்ரே ஆகிய மூன்று விதமான பாடி கலர் தேர்வில் கிடைக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா ஹெக்ஸா கார் அறிமுகம்!

மேலும், டாடா ஹெக்ஸா காரின் எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ் மற்றும் எக்ஸ்டிஏ வேரியண்ட்டுகளில் இந்த இரட்டை வண்ணக் கலவை தேர்வுகள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்எம் வேரியண்ட்டில் இரட்டை வண்ணக் கலவை தேர்வு இல்லை.

இதுதவிர்த்து, புதிய வடிவமைப்பிலான அலாய் வீல்கள் பொருத்தப்பபட்டுள்ளன. 17 அங்குல சார்கோல் என்ற வண்ணத்திலான அலாய் வீல்கள் எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும். மற்றொரு மாடலானது 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் எக்ஸ்டிஏ வேரியண்ட்டில் கிடைக்கும்.

புதிய 7 அங்குல திரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் க்ரோம் வளையம் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமீயமாக தெரிகிறது. விசேஷ பியானோ பிளாக் கருப்பு வண்ணத்தில் ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா ஹெக்ஸா கார் அறிமுகம்!

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். மேலும், வீடியோ பிளேபேக் வசதி, கனெக்ட் நெக்ஸ்ட், எமர்ஜென்சி அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளை அளிக்கும்.

மேலும், ஹார்மன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ், எஸ்எம், எக்ஸ்எம்ஏ, எக்ஸ்எம் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மூட் லைட்டிங் சிஸ்டமும் இந்த காரின் முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.

எஞ்சின் ஆப்ஷனில் மாற்றமில்லை. இந்த காரில் இருக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா ஹெக்ஸா காரில் இதுவரை வழங்கப்பட்ட எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி எக்ஸ்எம் வேரியண்ட்தான் அடிப்படை வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும். இந்த மாடல் ரூ.14.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும். பழைய விலையிலேயே தொடர்கிறது. ஆனால், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டிஏ ஆகிய வேரியண்ட்டுகளின் விலை ரூ.20,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
New Tata Hexa Car Launched In India.
Story first published: Thursday, February 28, 2019, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X