டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

டாடா டிகோர் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை வீடியோ வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையிலான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக கார்களை மேம்படுத்தும் பணிகளில் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், கார்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

தற்போது டாடா டிகோர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் புதிய டாடா டிகோர் செடான் காரின் ஸ்பை வீடியோ இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

அதில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய டாடா டிகோர் மேம்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த காரில் மாற்றங்கள்செய்யப்பட்டுள்ளன.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

பதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, இன்டீரியரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். கூடுதல் வசதிகளை தரும் விதத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

புதிய டாடா டிகோர் காரில் முக்கிய மாற்றமாக, இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிிறது. அதேநேரத்தில், இதன் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் கைவிடப்பட இருப்பதாகவும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வந்தவுடன் டீசல் மாடல் விற்பனையிலிருந்து விலக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் - வீடியோ

தற்போது விற்பனையில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய மாடலில் பவர் மற்றும் டார்க் திறன் சற்றே கூடுதலாக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய டாடா டிகோர் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய குறைவான விலை தேர்வு என்பது இதன் மிகப்பெரிய பலம்.

Image Courtesy: Area Of Interest

Most Read Articles
English summary
Indian automotive giant Tata Motors is currently working on upgrading its fleet of cars and SUVs to BS-VI compliancy. The latest member of the Tata lineup to be spied testing is the facelifted Tigor compact sedan, which was spotted testing in Maharashtra.
Story first published: Friday, April 12, 2019, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X