புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் டெல்லியில் நடைபெற்ற விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் வேரியண்ட்டுகள், விலை மற்றும் இதர முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

கூட்டணி

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இருநிறுவனங்களும் சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியாக செயல்பட முடிவு செய்தன. அதன்படி, மாருதி நிறுவனத்தின் சில கார்களை தனது பிராண்டில் டொயோட்டா ரீபேட்ஜ் செய்து வெளியிட உள்ளது.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

முதல் ரீபேட்ஜ் மாடல்

அதில், முதலாவது மாடலாக மாருதி பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மாருதி சுஸுகி பேட்ஜுகளை தூக்கிவிட்டு, டொயோட்டா பிராண்டு பெயர் மற்றும் சின்னத்தை பொறுத்தி க்ளான்ஸா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

வேரியண்ட் விபரம்

மாருதி பலேனோ கார் 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதிய டெயோட்டா க்ளான்ஸா கார் அதிக வசதிகள் கொண்ட வி மற்றும் ஜி என்ற இரண்டு உயர் வேரியண்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி பலேனோ காரின் பேஸ் வேரியண்ட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

சிறப்பம்சங்கள்

புதிய க்ரில் அமைப்பு மறறும் பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தவிரவும், புதிய 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் முக்கிய விஷயமாக இருக்கிறது. தோற்றத்தில் சிறிய வித்தியாசங்கள் தெரிகின்றன. மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இந்த காரிலும் வழங்கப்படும்.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

முக்கிய வசதிகள்

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை க்ளான்ஸா காரிலும் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். மேலும், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

எஞ்சின் விபரம்

புதிய டொயோட்டா க்ளான்ஸா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு விதமான வகைகளில் கிடைக்கும்.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

செயல்திறன்

ஜி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டில் இருக்கும் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை பெற்றிருக்கும். வி மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் மற்றும் ஜி, வி சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

மைலேஜ்

டொயோட்டா க்ளான்ஸா காரின் வி வேரியண்ட்டில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜையும், ஜி ஹைப்ரிட் வேரியண்ட் எஞ்சின் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 19.56 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

பாதுகாப்பு

புதிய டொயோட்டா க்ளான்ஸா காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

வண்ணங்கள்

வெள்ளை, சிவப்பு, நீலம், சாம்பர் மற்றும் சில்வர் என ஐந்துவிதமான வண்ணத் தேர்வுகளில் புதிய டொயோட்டா க்ளான்ஸா கார் விற்பனைக்கு கிடைக்கும்.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

விலை

புதிய மாருதி க்ளான்ஸா கார் ரூ.7.21 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 புதிய டொயோட்டா க்ளான்ஸா பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்

முன்பதிவு

ரூ.10,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா
English summary
New Toyota Glanza, a rebadged version of Maruti Baleno premium hatchback car launched in India today.
Story first published: Thursday, June 6, 2019, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X