மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் என்ற பெருமையை பலேனோ பெற்றுள்ளது. மாருதி சுஸுகியின் இந்த புரட்சிகரமான 'மூவ்' குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

மாருதி சுஸுகி பலேனோ இந்தியாவில் மிகவும் பிரபலமான பீரிமியம் ஹேட்ச்பேக் மாடலாக திகழ்கிறது. உறுதியான, திடமான முடிவுகளை எடுத்ததே இந்தியாவில் பலேனோவின் வெற்றி கதைக்கு பின்னால் இருக்கும் ரகசியம். அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய பலேனோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலம் சமீபத்தில் கூட ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டது.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் இந்த ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது? புதிய பலேனோ காரின் ஸ்டியரிங் வீல்களுக்கு பின்னால் நீங்கள் இருக்கும்போது, இந்த புரட்சிகரமான தொழில்நுட்பம் எப்படி உங்கள் உதவிக்கு வருகிறது? என்பதை சொல்ல எங்களை அனுமதியுங்கள்.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி வழங்கப்படும் இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் மாருதி சுஸுகி பலேனோதான். புத்தம் புதிய ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜினில் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி, பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் உரிமையாளர்களுக்கு புதியதோர் டிரைவிங் அனுபவத்தை கொடுக்கிறது.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

இந்த புதிய 1.2 லிட்டர் ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின், ஒரு சிலிண்டருக்கு இரண்டு இன்ஜெக்டர்களை கொண்டதாக உள்ளது. இதன் விளைவாக எரிபொருள் சிக்கனத்தில் இன்ஜின் மேம்படுகிறது. அத்துடன் மாசு உமிழ்வை குறைக்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் துணிச்சலானது மற்றும் ஸ்மார்ட்டானது.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

இந்தியாவில் கார்களின் எதிர்காலத்தை மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தி கொண்டு வருவதற்கு, இந்த புரட்சிகரமான ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் ஓர் நல்ல உதாரணம். மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி, இன்டிகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருடன் (Integrated Starter Generator - ISG) 2 பேட்டரி பேக்குகளை ஒருங்கிணைத்ததாக உள்ளது. இதில், ஒன்று லித்தியம் இயான் யூனிட். மற்றொன்று லீட்-ஆஸிட் ஸ்டோரேஜ் யூனிட்.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

மாருதி சுஸுகியின் ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி, டார்க் அஸிஸ்ட் ஃபங்ஷனையும் வழங்குகிறது. லித்தியம் இயான் பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல், ஆக்ஸலரேஷனின்போது இன்ஜினிற்கு உதவி செய்ய இந்த சிஸ்டம் அனுமதிக்கிறது. இதன் மூலம் விரைவான பிக் அப் கிடைத்து, நல்ல பெர்ஃபார்மென்ஸை உணரலாம். ஆனால் இதன் காரணமாக மைலேஜில் பாதிப்பு உண்டாகாது.

MOST READ: இந்திய மக்களின் மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பு... அதகளம் செய்ய களம் இறங்குகிறதா புதிய டொயோட்டா கார்?

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், idle நிலையில் இருக்கும்போது எரிபொருள் சிக்கனத்திற்காக இன்ஜினை ஆப் செய்கிறது. பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் சிஸ்டம், இந்த ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜியின் மற்றொரு புதிய வசதியாக உள்ளது. கார் மெதுவாகும்போது லித்தியம் இயான் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய இது உதவுகிறது.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

புதிய பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் இன்ஜின் 66kW பவர் மற்றும் 113Nm டார்க் திறனை உருவாக்குகிறது. இந்த புதிய இன்ஜினில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது இன்ஜின் சக்தியை முன் சக்கரங்களுக்கு கடத்துகிறது. புதிய பலேனோ காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் வழங்கப்பட்டுள்ள மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே முக்கியமானது. சராசரி எரிபொருள் சிக்கனம், ரேஞ்ச் உள்ளிட்ட காரின் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள இது உதவுகிறது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

புதிய பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் காரில், ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட் சென்சார்கள் மற்றும் அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதி ஆகிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் இன்ஜின் மற்றும் இன்டீரியர் என அனைத்து அம்சங்களிலும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பலேனோ காரில், முப்பரிமான க்ரில் அமைப்பு மற்றும் தனித்துவமான பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகின்றன. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இதன் தோற்றம் உள்ளது.

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் கூடிய புதிய பலேனோ கார், டெல்டா மற்றும் ஜெட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாக இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் டெல்டா வேரியண்ட்டின் விலை 7.24 லட்ச ரூபாய். அதே சமயம் புதிய பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் காரின் ஜெட்டா வேரியண்ட்டின் விலை 7.86 லட்ச ரூபாய் (இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

MOST READ: பென்ஸ் காருக்கு இணையான வசதிகளுடன் மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்.. எகிறும் எதிர்பார்ப்பு

மாருதி சுஸுகியின் புரட்சி! மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஹைப்ரிட் பீரிமியம் ஹேட்ச்பேக் காரை உங்கள் அருகில் உள்ள நெக்ஸா டீலர்ஷிப்களில் உங்களால் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும். இதன் மூலம் பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் காரின் சிறப்பான செயல்பாடுகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

Most Read Articles

English summary
NEXA Baleno — A Game Changer With Its Smart Hybrid Technology. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X