புதிய 2020 ஹோண்டா சிட்டி இன்ஜின் விபரங்கள் வெளியீடு!!

ஹோண்டா நிறுவனம் தனது லேட்டஸ்ட் தயாரிப்பு வாகனமான சிட்டி செடானை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த ஆயுத்தமாகி வருகிறது. இந்த ஐந்தாம் தலைமுறைக்கான காரானது 2019ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமாகக்கூடும் என தெரிகிறது.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

தாய்லாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் வெளியான பின்னர் இந்தியாவில் ஹோண்டா சிட்டி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்காரின் இன்ஜின் உள்பட மற்ற பாகங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

உலகம் முழுவதும் ஹோண்டா சிட்டி இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்று என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகவுள்ளது. பெட்ரோல் என்ஜினில் 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் என இரு விருப்பங்கள் இருக்கும். இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

இந்த என்ஜின் முழுக்க முழுக்க தாய்லாந்து மார்கெட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோண்டா நிறுவனம் இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு மிக குறைவு. ஆனால் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கண்டிப்பாக இந்தியாவில் வெளியாகும். இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் நியூ ஐ-எம்எம்டி என்ற லேசான கலப்பின சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டிக்கு முன்பாகவே இந்த அமைப்பை கொண்ட ஹேட்ச்பேக்காக ஹோண்டா ஜாஸ் இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு ஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸும், சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் 1.5 லிட்டரில் தற்போது இந்தியாவில் உள்ள ஹோண்டா சிட்டி என்ஜினின் பவரில் வெளியாகவுள்ளது. இதனால் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்பது நமக்கு தெரிந்ததே. ஹோண்டா நிறுவனம் இந்த என்ஜினை பிஎஸ்6 தரத்துடன் அப்டேட் செய்யவும் உள்ளது.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

ஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் வரவுள்ள இந்த டீசல் என்ஜினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் ஹோண்டா நிறுவனம் இணைக்கலாம் என தெரிகிறது. இவ்வாறு இணைப்பு நடந்தால் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட டீசல் வேரியண்ட் என்ஜினை கொண்ட முதல் செடான் காராக இந்த 2020 ஹோண்டா சிட்டி கார் தான் இருக்கும்.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

இந்த ஹோண்டா சிட்டி இந்தியாவில் அறிமுகமாகவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளது. டிசைன் மாற்றம் மற்றும் அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த புதிய ஐந்தாம் தலைமுறைக்கான செடான் வெளியாகவுள்ளது.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

இந்த டிசைன் மாற்றத்தில், முழுவதுமாக மாற்றப்பட்ட புதிய முன்புற மற்றும் பின்புற எல்இடி ஹெட்லைட்கள், முன்புற ஃபேசியா, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிவிக் செடானில் உள்ளது போன்ற க்ரில் அமைப்புகளும் சேரும். பெரிய தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் அமைப்பு, ஸ்மார்ட்போனுடன் இணைக்கக்கூடிய வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர், முழுவதுமாக சீரமைக்கப்பட்ட டேஸ்போர்டு போன்றவையும் இக்காரில் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்று என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ள நியூ(2020) ஹோண்டா சிட்டி!

ஹோண்டா சிட்டியை பல தொழிட்நுட்ப அம்சங்களுடன் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. செயல்திறன், டிசைன், நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் பயணம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் இந்த ஹோண்டா சிட்டி வெளியாகவுள்ளதால் செடான் வகை கார்களில் மிகவும் மதிப்புள்ள மாடலாக இது விளங்கும். இதனால் இந்த மாடல் கார் ஆட்டோமொபைல் மார்கெட்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
New (2020) Honda City Engine Specs & Other Details Revealed Ahead Of Launch Next Year
Story first published: Friday, October 11, 2019, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X