புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

இந்தியர்களின் மனம் கவர்ந்த எஸ்யூவி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா புதிய தலைமுறையை கண்டுள்ளது. அண்மையில் சீனாவில் ஐஎக்ஸ்-25 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தலைமுறை மாடலானது விரைவில் இந்தியாவில் க்ரெட்டாவாக விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், புதிய தலைமறை ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலை சோதனையில் வைக்கப்பட்டு இருந்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

இதில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடலில் இருந்து இந்தியாவில் வர இருக்கும் மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஎக்ஸ்-25 எஸ்யூவியில் முன்புறத்தில் தேன்கூடுவ வடிவிலான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய மாடலில் படுக்கை சட்டங்களுடன் கூடிய க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

அதேபோன்று, புதிய டிசைனிலான அலாய் வீல்களுடன் இந்திய க்ரெட்டா மாடல் தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஹெட்லைட் அமைப்பில் மாறுதல்கள் இல்லை என்று இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. பனோரமிக் வகையிலான பெரிய சன்ரூஃப் அமைப்பும் புதிய க்ரெட்டாவில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

எல்இடி பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு ஆன்டென்னா உள்ளிட்டவையும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளது. பம்பரில் இரு மருங்கிலும் பனி விளக்குகள் அறை கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போதைய மாடலிலிருந்து முகப்பு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்று தெரிய வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Ahead of its launch, the new (2020) Hyundai Creta has been spied testing in the India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X