உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகமாவது எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

மாருதி சுஸுகி நிருவனம் அதன் அடுத்த தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த கார் 2020ம் ஆண்டின் இரண்டாம் அரையிறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றும் புகழ்வாய்ந்த மாடல்களில் செலிரியோ மாடலும் ஒன்று.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

அதேபோன்று, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் ரக காரிலும் இது ஒன்றாக இருக்கின்றது. மாருது சுஸுகி நிறுவனம், செலிரியோ மாடலை கடந்த 2014ம் ஆண்டுதான் முதல்முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் மிக பழமை வாய்ந்ததாகவும், அப்கிரேட் செய்யப்படாமலும் இருந்தது வந்தன.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

அதேசமயம், சந்தையில் ஹேட்ச்பேக் ரகத்தில் விற்பனைக்கு வந்த கார்கள், இதைக்காட்டிலும் கணிசமான அப்கிரேடான மாடலாக இருந்தது. இதனால், விலை சற்று அதிகமாக இருந்தாலும், தற்போதைய காலகட்ட தொழில்நுட்பம் அடங்கிய மாடல்களுக்கு, வாகன பிரியர்கள் பலர் மாற ஆரம்பித்தனர். இதனால், செலிரியோவின் விற்பனை கணிசமாக சரிவைக் காண ஆரம்பித்தது.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

ஆகையால், இதனைக் கருத்தில் கொண்ட மாருதி சுஸுகி நிறுவனம், செலிரியோ காரை அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு அப்கிரேட் செய்ய திட்டமிட்டது. மேலும், அந்த காரில், போட்டி நிறுவனங்களின் கார்களுக்கு ஏற்பவாறு பல்வேறு சிறப்பு வசதிகளை புகுத்தவும் எண்ணியது.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

அந்தவகையில், அதன் புதுப்பிக்கப்பட்ட மாடலைதான் அந்த நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த 2017ம் ஆண்டு செலிரியோ, முந்தைய மாடலைக் காட்டிலும் சிறப்பு தோற்றத்தைப் பெற்றிருந்தது. மேலும், கூடுதல் வசதிகளும் அடக்கியிருந்தது.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

இந்நிலையில்தான், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த செலிரியோ மாடலை அடுத்த தலைமுறைக்கேற்ப உருவாக்கியுள்ளது. மேலும், அதனை அதன் ஒய்என்சி என்ற கான்செப்ட் மாடலை தழுவி தயாரித்துள்ளது. இதுகுறித்த தகவலை எகனாமிக் டைம்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், இந்த புதிய மாடல் செலிரியோ, இந்தியாவில் 12 முதல் 18 மாதங்களுக்கு பின்னரே அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

இந்த அடுத்த தலைமுறை செலிரியோ கார் முழுக்க முழுக்க பாதுகாப்பு அம்சத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செலிரியோவில் பாதுகாப்பு அம்சங்களாக ட்யூவல் ஏர்பேக்குகள், சீல்ட் பெல்ட் வார்னிங், ஸ்பீட் லிமிட் வார்னிங் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அதேசமயம், செலிரியோவின் ஹை என்ட் மாடல், இதைவிட கூடுதலான பாதுகாப்பு அம்சங்களைப் பெற இருக்கின்றது.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

பாதுகாப்பு மட்டுமின்றி செலிரியோ கார் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலிலும் சிறந்த மாடலாக விளங்க இருக்கின்றது. அந்த வகையில், இந்த அடுத்த தலைமுறை செலிரியோவில் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் பொருத்தப்பட இருக்கின்றது. ஆனால், அதன் எஞ்ஜின் குறித்து முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.

உங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்!

தற்போதைய செலிரியோவில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இத்துடன் இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Next-Gen Maruti Suzuki Celerio To Be Launched In 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X