புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

உலகின் மிக உயரிய கார் பிராண்டாக ரோல்ஸ்ராய்ஸ் கருதப்படுகிறது. பெரும் பணக்காரர்கள் தங்களது ஆடம்பர சின்னமாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கருதுகின்றனர். இந்த நிலையில்,கால மாற்றத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

கடந்த 2017ம் ஆண்டு புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்நிறுவனத்தின் கல்லினன் எஸ்யூவி மாடலும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த சூழலில், புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

தற்போதைய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் மோனோகாக் சேஸீயை பங்கிட்டுக் கொண்டுள்ளது. ஆனால், புதிய தலைமுறை மாடலில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் உருவாக்கப்படும் சேஸீ பயன்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஸ்டீல் சேஸீக்கு பதிலாக அலுமினிய சேஸீ பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

இதனால், தற்போதைய மாடலைவிட புதிய கோஸ்ட் கார் எடை 2.45 டன் என்பதிலிருந்து 2.36 டன் என்ற அளவில் குறையும். அதேநேரத்தில், தொழில்நுட்ப கருவிகள் மூலமாக தற்போதைய காருக்கு நிகரான எடைக்கு கொண்டு வருவதற்கும் ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.

MOST READ:மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆட்டோமேட்டிக் மாடல் விரைவில் அறிமுகம்!

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

ரோல்ஸ்ராய்ஸ் தாய் நிறுவனமான ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சோதனை களங்களில் வைத்து புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் புரோட்டோடைப் மாடல்கள் கள சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்ப்டடு வருகின்றன.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

மேம்படுத்தப்பட்ட புதிய 6.6 லிட்டர் வி12 எஞ்சின் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 785 எச்பி பவரையும், 849 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதாவது, இதே எஞ்சின்தான் பிஎம்டபிள்யூ எம்760எல்ஐ எக்ஸ்டிரைவ் மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் எஞ்சின் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருக்கிறது. மேலும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படும். இதனால், செயல்திறனிலும் சிறப்பான மாடலாக வர இருக்கிறது.

MOST READ:ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

புதிய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர கார் அறிமுக விபரம்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் மற்றும் கல்லினன் கார்களில் இடம்பெற்றிருக்கும் பல தொழில்நுட்ப வசதிகள் இந்த புதிய கோஸ்ட் காரிலும் இடம்பெறும். அதேபோன்று, வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கார் வர இருக்கிறது. இதனால், புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் இப்போதே பெரும் பணக்கார்களின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளது.

Most Read Articles

English summary
Next-gen Rolls-Royce Ghost Luxury Car Coming in 2020
Story first published: Monday, April 8, 2019, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X