மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட புதிய நிஸான் கிக்ஸ் கார் புனே அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

மாசு உமிழ்வு சோதனை கருவிகளுடன் உள்ளதால் இந்த மாடல் விற்பனை செய்யப்படுவதற்கான சரியான அனுமதியை இன்னும் வாங்கவில்லை என்பது தெரிய வருகிறது. உலகம் முழுவதிலும் நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பு மாடல்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இந்தியாவில் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்றவாறு நிஸானின் தயாரிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

நிஸான் கிக்ஸ் மாடல் எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி ப்ரீமியம் மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம்+ என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இவை மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் எச்4கே பெட்ரோல் என்ஜின் 106 பிஎச்பி பவரையும் 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் 110 பிஎச்பி பவரையும் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளன.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

மேலும் இந்த இரு என்ஜின்களும் ரெனால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் இந்த பிஎஸ்4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட ரெனால்ட் மற்றும் நிஸான் வாகனங்களின் விற்பனை தற்சமயம் இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

நிஸான் நிறுவனம் கிக்ஸ் மாடலை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.9.55 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியது. 2018ஆம் வருடத்துடன் நிறுத்தப்பட்ட நிஸான் டெர்ரானோ மாடலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிக்ஸ் மாடல், இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500, ரெனால்ட் கேப்சர் மற்றும் கியா செல்டோஸ் மாடலின் விலை குறைவான வேரியண்ட்களுடன் போட்டியிட்டு வருகிறது.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

இவ்வாறு பல பிரபலமான மாடல்களுடன் இந்த கார் போட்டியிட்டு வருவதால் இந்தியாவில் கிக்ஸ் மாடலை விற்க நிஸான் நிறுவனம் கடுமையாக போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த டிசம்பர் மாதத்திற்கு சில சலுகைகளை இந்த கிக்ஸ் காருக்கு அறிவித்திருந்தது. இந்த சலுகையின் மூலம் கிக்ஸ் மாடலை வாங்குவோர் ரூ.1.10 லட்சம் வரையில் தள்ளுபடியையும் நிச்சய பரிசு ஒன்றையும் பெறலாம்.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

மேலும் நிஸான் நிறுவனம் தனது தயாரிப்பு கார்களின் விலைகளை அடுத்த ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி எந்தெந்த நிஸான் மற்றும் டட்சன் கார்கள் விலை அதிகரிப்பை பெறவுள்ளன என்பதை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

கிக்ஸ் மாடலுடன் நிஸான் நிறுவனத்தின் சில கார்களும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த மாற்றத்தால் நிஸான் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மாசு உமிழ்வு கருவிகளுடன் புதிய நிஸான் கிக்ஸ் கார் சோதனை ஓட்டம்...

ஏனெனில் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக தனது தயாரிப்புகளின் இந்திய விற்பனையில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் இந்தியாவில் நிஸான் கார்களை சாலைகளில் பார்பது அரிதாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Spy Pics: Nissan Kicks BS6 Variant Spotted Testing In Pune
Story first published: Friday, December 20, 2019, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X