விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

நிஸான் நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, அதன் கிக்ஸ் மாடலில் டீசல் வேரியண்டை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை ஆச்சரியமளிக்கும் வகையில் குறைவான விலையில் களமிறக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

மிக வேகமாக வளர்ந்து வந்த இந்திய வாகன சந்தை, அண்மைக் காலங்களாக கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த வீழ்ச்சியில் நிஸான் நிறுவனமும் தப்பவில்லை.

இதில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் கிக்ஸ் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் கட்ந்த ஜூலை மாத விற்பனையைப் பார்த்தோமேயானால் கடும் மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

அந்தவகையில், கடந்த ஜீலை மாதம் நிஸான் கிக்ஸ் வெறும் 132 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதனால், அதிர்ந்துபோன நிஸான் நிறுவனம், தற்போது கிக்ஸ் மாடலில் புதிய வேரியண்டை அறிமகம் செய்துள்ளது. இதன்மூலம் கணிசமாக விற்பனை விகிதத்தை உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

அவ்வாறு, தற்போது களமிறக்கப்பட உள்ள புதிய வேரியண்ட் தற்போது விற்பனையில் இருக்கும் கிக்ஸைக் காட்டிலும் 96 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்தவகையில், நிஸான் கிக்ஸ் எக்ஸ்இ என்ற டீசல் வேரியண்டைதான் அந்நிறுவனம் புதிதாக களமிறக்க இருக்கின்றது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 9.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

அதேசமயம், எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் கிக்ஸ் எக்ஸ்வி பிரிமியம் உள்ளிட்ட மாடல்களில் புதிய அம்சங்களை சேர்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால், அவற்றின் விலை ரூ. 24 ஆயிரம் அதிகரிக்க உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

புதிதாக களமிறங்கும் நிஸான் கிக்ஸ் எக்ஸ்இ வேரியண்டைப் பார்த்தோமேயானால், பல சிறப்பம்சங்கள் அடங்கிய மாடலாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்இ வேரியண்ட் கிக்ஸ் மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக இபிடி வசியுடன் கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் அம்சம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற இருக்கின்றது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வசதியாக குழந்தைகள் லாக்குடன் கூடிய சென்ட்ரல் டூர் லாக், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டூர் லாக், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டூர் அன்லாக் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

அதேபோன்று, நவீன தொழில்நுட்ப வசதியாக, ரியர் ஏசி வெண்டுகளுடன் கூடிய ஆட்டோ ஏசி, 4 ஸ்பீக்கர்களுடன் இன்டெக்ரேடட் 2 டிஐஎன் ஆடியோ சிஸ்டம், மின் விளக்கு மற்றும் கூலிங் திறனுடன் கூடிய குளோவ் பாக்ஸ், நிஸான் கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறுவப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

இதைத்தொடர்ந்து, மேற்கூறியதைப் போன்று, நிஸான் கிக்ஸ் எக்ஸ்எல் வேரியண்ட்டில் புதிய அம்சமாக 8 இன்சிலான ஆன்ட்ராய்டு (A-IVI android in vehicle infotainment) திறன் கொண்ட இன்ஃபோடெயிண்ட் மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

இத்துடன், ஆப்பிள் கார் பிளே/ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரல் அங்கீகாரம், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல், ஆர்17 5 ஸ்போக் மெஷினட் அலாய் வீல், டைணமிக் கன்ட்ரோல், பனி விளக்கு, ஈகோ மோட் மற்றும் ரூஃப் ரெயில் உள்ளிட்ட அம்சங்களையும் வழங்க உள்ளது. இந்த மாடலுக்கு ரூ. 11.09 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

இதேபோன்று, ரூ. 12.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கும் கிக்ஸ் எக்ஸ்வி, புதிய அம்சங்களாக எல்இடி புரொஜக்டர் ஹெட்லேம்ப், புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டண், கீ லெஸ் நுழைவிற்கான ஸ்மார்ட் கார்டு, மின்சாரத்தால் கட்டுபடுத்தக்கூடிய மற்றும் மடித்துக் கொள்ளக்கூடிய ஓஆர்விஎம்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

மேலும், டாப் எண்ட் மாடலாக இருக்கும் எக்ஸ்வி வேரியண்டை ட்யூவல் டோனில் அறிமுகம் செய்ய இருக்கின்றது நிஸான். இத்துடன், இன்டீரியரில் கார்பன் ஃபைர் ஃபினிஷிங்கும், 360 பார்வை திறன் கொண்ட மானிட்டர், பக்கவாட்டு ஏர்பேக், லெதர் இருக்கைகள் மற்றும் லெதரால் போற்றப்பட்ட சாஃப்ட் டச் டேஷ், ஆட்டோ ஹெட்லேம்ப், கார்னரிங் முகப்பு பனி விளக்கு உள்ளிட்டை தானியங்கி வைப்பர் இடம்பெற உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

சிறப்பம்சங்களில் வித்தியாசம் கொண்டு காணப்படும் இந்த நிஸான் கிக்ஸ் மாடல்கள், எஞ்ஜின் திறனிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. அந்தவகையில், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டிசிஐ டீசல் எஞ்ஜின்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 106 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

அதேபோன்று, 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் தானியங்கி கியர்பாக்ஸ் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. ஆனால், நிறுவனம் அதற்கான எந்த திட்டத்தையும் வெளியிடவில்லை.

விற்பனையில் உள்ள மாடலைக் காட்டிலும் மலிவான விலையில் களமிறங்கும் நிஸான் கிக்ஸ்... முழு தகவல்!

நிஸான் கிக்ஸிஸ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கனெக்ட் தொழில்நுட்பம், ஜியோ பென்சிங், ஸ்பீட் அலர்ட், கர்பியூ அலர்ட், காரை கண்டறிய மற்றும் இருப்பிடத்தை பகிர உதவும். இது, காரின் பாதுகாப்பு மட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். ஆகையால், இந்த அம்சம் கிக்ஸ் மாடலின் உரிமையாளருக்கு மிகச்சிறந்ததாக அமையும் என கூறப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Kicks Gets Diesel Variant. Read In Tamil.
Story first published: Thursday, August 8, 2019, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X