லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் களமிறக்கப்படவுள்ளன. மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. இந்திய மார்க்கெட்டில் இது பல்வேறு விஷயங்களை மாற்றவுள்ளது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

அத்துடன் எலெக்ட்ரிக் கார்கள் வரும் காலங்களில் நன்கு பிரபலம் அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

அத்துடன் நிஸான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

இந்த சூழலில் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வேவிற்கு அருகே இந்த கார் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து ரஸ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

தற்போது உலகின் பல்வேறு மார்க்கெட்களில் நிஸான் லீஃப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் நிஸான் லீஃப் திகழ்கிறது. நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

சிபியூ வழியில்தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளது. எனவே இதன் விலை 40 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக விலை என்பதால், விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நிஸான் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

இதன் ஒரு பகுதியாக சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் வழங்கப்படும் வசதிகளை காட்டிலும், இந்திய மார்க்கெட்டிற்கான மாடலில் குறைவான வசதிகளே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் கார் பேஸிக் மாடலாக இருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் ஸ்டீல் ரிம்களை மட்டுமே இது பெற்றுள்ளது. அத்துடன் மிரருடன் இணைந்த எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் ஆகிய வசதிகளும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரு சில லட்சங்கள் விலை குறையலாம்.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

அதே சமயம் இன்டீரியர் படங்களை வைத்து பார்க்கையில், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளை இது பெற்றிருப்பது தெரியவருகிறது.

லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... விலையை குறைக்க வசதிகளையும் குறைக்கிறது நிஸான்...

நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரில், 40 kWh பேட்டரியுடன் கூடிய 140 எச்பி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இது 240 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். பேட்டரி சார்ஜ் ஏற 8-16 மணி நேரங்கள் வரை ஆகும். ஆனால் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது. இதனை பயன்படுத்தினால், வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Leaf EV Caught On Test In India. Read in Tamil
Story first published: Thursday, June 13, 2019, 20:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X