இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

கடந்த ஜனவரி மாதம் முதலே இந்தியாவில் கார் விற்பனையில் சுணக்க நிலை காணப்படுகிறது. மாதத்திற்கு மாதம் கார் விற்பனையில் பெரும் சரிவு காணப்படுவதால், பல முன்னணி கார் நிறுவனங்கள் உற்பத்தியை வெகுவாக குறைத்தன. மேலும், டீலர்களிலும் கார்கள் தேக்கமடைந்துள்ளன.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

இதனால், கார் நிறுவனங்களுக்கு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் விற்பனை உலக அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் லாபமும் 95 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

இதனால், அந்நிறுவனம் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அதன்படி, உலக அளவில் 12,500 பேரை பணி நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

மொத்தம் 12,500 பேரில் 6,400 பேரை பணியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிஸான் நிறுவனம் தெரிவித்ததுள்ளது. ஜப்பானை தவிர்த்து, இந்தியா, ஸ்பெயின், இந்தோனேஷியா, ரஷ்யா, பிரான்ஸ், தாய்லாந்து, மெக்ஸிகோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆலைகளில் பணிபுரிபவர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் சிக்கி இருக்கின்றனர்.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

இந்தியாவிலும் நிஸான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எதிர்கால வர்த்தகத்தை கணக்கில்கொண்டு நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் 1,700 பேரை பணி நீக்கம் செய்ய நிஸான் முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

சென்னையில் செயல்பட்டு வரும் ரெனோ - நிஸான் கூட்டணியிலான கார் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சென்னையிலுள்ள நிஸான்- ரெனோ ஆலை பணியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை தரும் விஷயமாகவும் மாறி இருக்கிறது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையால் கடந்த ஆண்டு முதலே விருப்ப ஓய்வு திட்டத்தை நிஸான் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஏற்றுமதி மூலமாக இந்திய வர்த்தகத்தை ஓரளவு சமாளித்து வருகிறது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

எனினும், இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கார் விற்பனையில் மந்த நிலை காணப்படுவதால், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை நிஸான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் 1,700 பேரை பணிநீக்கம் செய்ய நிஸான் கார் நிறுவனம் முடிவு!

நிஸான், டட்சன் பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. தொடர்ந்து தோல்வியாகவே அமைந்து வருகிறது. எனவே, உற்பத்தியையும் 10 சதவீதம் வரை குறைப்பதற்கான திட்டத்தையும் நிஸான் நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Motor India is planning to reduce the headcount in the country by over 1,700 this fiscal.
Story first published: Saturday, July 27, 2019, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X