ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

ஜனவரி முதல் கார் விலையை கணிசமாக உயர்த்த இருக்கிறது நிஸான் நிறுவனம். நிஸான் மற்றும் டட்சன் என இரு பிராண்டு கார்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் இந்திய மார்க்கெட்டில் வர்த்தகத்தில் தடுமாறி வருகிறது. ஏற்கனவே விற்பனை மோசமாக இருந்து வரும் நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, கூடுதல் உற்பத்தி செலவீனம் உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

வரும் ஜனவரி முதல் தனது கார்களின் விலையை 5 சதவீதம் உயர்த்த இருப்பதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

இதுகுறித்து நிஸான் இந்தியா தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு மிக்க தயாரிப்புகளை வழங்கி வருகின்றோம். புதுமையான, சிறந்த கார் மாடல்களை நிஸான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம்.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

தற்போதைய சவாலான சந்தை சூழலில், உற்பத்தி செலவீனத்தை மனதில் வைத்து அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்," என்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் கியா மோட்டார்ஸ் வரிசையில் நிஸான் கார் நிறுவனமும் கார் விலையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

இதனிடையே, தற்போது நிஸான் ரெட் வீக்கெண்ட்ஸ் என்ற பெயரில் கார்களுக்கான சிறப்புத் தள்ளுபடி சலுகையை நிஸான் வழங்கி வருகிறது. இதன்படி, நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கு ரூ.40,000 வரை தள்ளுபடியும், ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடியை பெற முடியும்.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

இதேபோன்று, டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.65,000 வரையிலான தள்ளுபடியும் ரெட் வீக்கெண்ட்ஸ் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, ரூ.1 கோடி மதிப்புடைய சிறப்புப் பரிசுகளையும் வாடிக்கையாளர்களுக்கு நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்கள் வழங்க உள்ளன.

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

டட்சன் பிராண்டில் ரெடிகோ கார் ரூ.2.79 லட்சத்திலிருந்தும், நிஸான் மைக்ரா ஆக்டிவ் கார் ரூ.5.29 லட்சத்திலிருந்தும் கிடைக்கின்றன. அண்மையில் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has announced that the company will increase car prices across the Nissan and Datsun model range upto 5 percent from January, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X