மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது பொதுமக்களின் கவனம் திரும்பி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாக மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஓட்டியுள்ளார். எம்ஜி இஸட்எஸ் (MG ZS) கார்தான் அது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் இது போட்டியிடவுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

எம்ஜி நிறுவனம் இன்று (டிசம்பர் 19) டிரைவ் ஈவெண்ட் ஒன்றை நடத்தியது. அப்போதுதான் அமைச்சர் நிதின் கட்கரி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஓட்டினார். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

மிகவும் புகழ்பெற்ற எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஜூன் மாதம் களமிறங்கியது. அப்போது முதல் தயாரிப்பாக ஹெக்டர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இந்திய மார்க்கெட்டில் வெளியிட்டது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில், 44.5 kWh, லிக்யூட்-கூல்டு NMC (Nickel Manganese Cobalt) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இந்த காரின் மின் மோட்டார் 353 என்எம் டார்க் மற்றும் 143 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் இந்த எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு உண்டு.

MOST READ: வானில் 2 விமானங்கள் சந்தித்து கொண்டால் பைலட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாத உண்மை...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

சூப்பர்-ஃபாஸ்ட் டிசி சார்ஜர்கள் (50 kW) மூலம் சார்ஜ் செய்தால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். அதே சமயம் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் மூலமாக சார்ஜ் செய்தால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற தோராயமாக 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஓட்டுவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கும் சூழலில், அந்த அதிர்ஷ்டம் அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போதே அடித்துள்ளது. மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருபவர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அத்துடன் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் அளவு கணிசமாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Nitin Gadkari Drives The MG ZS Electric SUV. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X