தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிடம், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் கார்கள் மீண்டும் ஒரு முறை வீழ்ந்துள்ளன.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி, கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக சவாலான விலை நிர்ணயம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளிட்ட காரணங்களால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் பேராதரவை வழங்கி வருகின்றனர்.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

எம்ஜி ஹெக்டர் கார் தற்போது மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் 140 பிஎச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் இதே இன்ஜின் மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷனுடனும் வழங்கப்படுகிறது.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

இது தவிர 2 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் எம்ஜி ஹெக்டர் காரில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

அதே சமயம் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் இன்ஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளன. இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளையும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெற்றுள்ளது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல், எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் மற்றும் அதன் போட்டியாளர்களின் நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. தற்போது மார்க்கெட்டில் மந்தநிலை நிலவி வரும் சூழலிலும் கூட, கடந்த நவம்பர் மாதம் 3,239 ஹெக்டர் கார்களை எம்ஜி விற்பனை செய்துள்ளது.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

இதன் மூலம் இந்த செக்மெண்ட்டின் 'பெஸ்ட் செல்லர்' என்ற பெருமையை எம்ஜி ஹெக்டர் பெற்றுள்ளது. ஆம், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட போட்டியாளர்களை எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மீண்டும் ஒரு முறை வீழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 762 ஹாரியர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

அதே சமயம் ஜீப் நிறுவனம் 638 காம்பஸ் கார்களையும், மஹிந்திரா நிறுவனம் 981 எக்ஸ்யூவி500 கார்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் அடுத்த தலைமுறை மாடல் அடுத்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாடா ஹாரியர் கார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பிஎஸ்-6 வேரியண்ட்டை பெறவுள்ளது.

தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன

மேலும் டீசல்-ஆட்டோமெட்டிக் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜீப் காம்பஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு வரவுள்ளது. அதுவரை சேல்ஸ் சார்ட்டில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த செக்மெண்ட்டில் உங்களுக்கு விருப்பமான கார் எது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
English summary
November 2019 Sales Analysis: MG Hector, Mahindra XUV500, Tata Harrier, Jeep Compass. Read in Tamil
Story first published: Saturday, December 7, 2019, 0:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X