சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

சொகுசு கார்களை வாடிக்கையாளர்கள் சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான செல்ஃப் டிரைவிங் சேவையை ஓலா கார் நிறுவனம் பரீட்சார்த்த முறையில் துவங்கி இருக்கிறது.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

மொபைல் செயலி மூலமாக வாடகை கார்களை புக்கிங் செய்யும் சேவையை வழங்கி வரும் ஓலா நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பெருநகரங்களில் உள்ளூர் வாடகை கார் சேவை மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கான சேவையையும் அளிக்கத் துவங்கியது.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, மின்சார வாடகை கார் சேவையையும் விரிவுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சொகுசு கார்களை சொந்தமாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது ஓலா கார் நிறுவனம்.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

முதல்கட்டமாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவையை வழங்கும் ஓலா ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், வாடிக்கையாளர்களே காரை சொந்தமாக ஓட்டும் வாய்ப்பை பெற முடியும்.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

ஓலா மொபைல் அப்ளிகேஷன் மூலமாக இந்த சேவையை முன்பதிவு செய்து பெற முடியும். ஓலா மொபைல் செயலியில் லக்ஸ் என்ற பிரிவின் வாயிலாக இந்த சேவையை வழங்குகிறது ஓலா. முதல்கட்டமாக பெங்களூரில் இந்த சேவையை பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்துள்ளது.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

ஓலா மொபைல் அப்ளிகேஷனில் சந்தா கட்டண அடிப்படையில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற முடியும். இதற்காக, 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கு ஓலா டாக்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

பெங்களூரில் இந்த திட்டம் வெற்றி கண்டால் விரைவில் பிற நகரங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது. இதே போன்ற திட்டத்தின்கீழ், ஸூம்கார், டிரைவ்ஈஸி உள்ளிட்ட நிறுவனங்கள் கார்களை சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டும் சேவையை வழங்கி வருகின்றன.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பை வழங்கும் ஓலா!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்திய சந்தையில் இந்த திட்டத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த திட்டத்திற்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாக ஓலா கண்டறிந்தே இறங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Ola Plans To Launch Self-Drive Car Rental Service Soon.
Story first published: Wednesday, April 24, 2019, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X