இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

நம்ம ஊரு ஆட்டோ ரிக்ஸாக்கள், இங்கிலாந்து நகர சாலைகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கெத்தாக வலம் வந்து கொண்டுள்ளன.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

இந்தியாவை சேர்ந்த ஓலா கேப்ஸ் (Ola Cabs) நிறுவனம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஓலா கேப்ஸ், இடைப்பட்ட ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஓலா கேப்ஸ் சேவையாற்றி வருகிறது.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

ஓலா கேப்ஸ் நிறுவனம் முதல் முறையாக கால் பதித்த வெளிநாடு ஆஸ்திரேலியாதான். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் ஓலா கேப்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தியது. இதன்பின் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து நாட்டில் ஓலா கேப்ஸின் சேவை தொடங்கப்பட்டது. ஓலா கேப்ஸ் சேவையை பெற்ற முதல் இங்கிலாந்து நகரம் கார்டிப் (Cardiff).

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

கார்டிப்பை தொடர்ந்து, 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிஸ்டல் (Bristol) நகருக்கும், நவம்பர் மாதம் பாத் (Bath) மற்றும் எக்ஸீடர் (Exeter) ஆகிய நகரங்களுக்கும் ஓலா கேப்ஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆக மொத்தம் இங்கிலாந்து நாட்டின் நான்கு நகரங்களில் ஓலா கேப்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

இந்த சூழலில், ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சேவை கிடைக்கும் 5வது நகரமாக உருவெடுத்துள்ளது லிவர்பூல் (Liverpool). லிவர்பூல் நகரில் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. அங்கு ஆட்டோ ரிக்ஸாக்கள் மூலம் சேவையாற்றி வருகிறது ஓலா. இதற்காக இந்தியாவின் பஜாஜ் மற்றும் இத்தாலியின் பியாஜியோ ஆகிய நிறுவனங்களின் ஆட்டோ ரிக்ஸாக்களை அங்கு களமிறக்கியுள்ளது.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

இந்திய அளவில் ஓலா கேப்ஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், சர்வதேச அளவில் உபேர் (Uber) நிறுவனத்தின் கையே ஓங்கியுள்ளது. உபேர் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது உபேர் நிறுவனத்தின் சேவை கிடைத்து வருகிறது. உபேர் நிறுவனத்தை ஓவர் டேக் செய்யும் விதமாகதான் தற்போது லிவர்பூல் நகரில் ஓலா கேப்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

அங்கு முதல் நாளின்போது பயணிகளுக்கு இலவச சேவை வழங்கி அசத்தியுள்ளது ஓலா கேப்ஸ். இந்திய சாலைகளில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஆட்டோ ரிக்ஸாக்கள் வலம் வந்து கொண்டுள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் ஆட்டோ ரிக்ஸாக்களின் நிறம் மாறினாலும், இந்திய மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவையாக அவை உள்ளன.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

அப்படிப்பட்ட ஆட்டோ ரிக்ஸாக்கள் தற்போது இங்கிலாந்து மக்களையும் கவர்ந்திழுக்க தொடங்கி விட்டன. இந்த ஆட்டோ ரிக்ஸாக்கள் பிரகாசமான நியான் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதன் டாப் கருப்பு நிறத்தில் உள்ளது. ஆட்டோ ரிக்ஸா டிரைவர்கள் அனைவரும் நியான் பச்சை நிற ஜாக்கெட்களைதான் அணிந்துள்ளனர்.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

நம்ம ஊர் பஜாஜ் ஆட்டோ ரிக்ஸாக்கள், இங்கிலாந்து நகர சாலைகளில் அந்நாட்டு பயணிகளை சுமந்து சென்று கொண்டிருப்பதற்கு காரணமாக உள்ள ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆட்டோ ரிக்ஸா சேவைக்கு லிவர்பூல் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த கண் கொள்ளா காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

முதல் நாளில் இலவச சேவை வழங்கியதுடன் மட்டுமல்லாது, ஓலா கேப்ஸின் வருகையை குறிக்கும் வகையில், இன்னும் பல அறிமுக சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், கூகுள் ப்ளே (Google Play) அல்லது ஆப் ஸ்டோரில் (App Store) கிடைக்கும் ஆப்பை, ஏப்ரல் இறுதிக்கு முன்பாக டவுன்லோடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி என்ற சலுகையும் ஒன்று என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு கிடைத்த பெருமை... நம்ம ஊரு ஆட்டோக்கள் இங்கிலாந்தில் கெத்தாக வலம் வர காரணம் இதுதான்...

இது குறித்து ஓலா யுகேவின் (Ola UK) நிர்வாக இயக்குனர் பென் லெக் (Ben Legg) கூறுகையில், ''பயணிகளுடன் பயணம் செய்தேன். இதன்மூலம் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அதுகுறித்து விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்'' என்றார்.

Most Read Articles
English summary
Ola Starts Operations In The Liverpool With Bajaj Auto Rickshaw. Read in Tamil
Story first published: Tuesday, March 26, 2019, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X