பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

மத்திய அரசின் திட்டத்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. விலை எவ்வளவு உயர்கிறது? என தெரிந்தால், ஒரு வேளை உங்களுக்கு வாகனம் ஓட்டும் எண்ணமே போய் விடலாம்.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்னை பெட்ரோல், டீசல் விலை உயர்வு. இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஒரு சில குடும்பங்களில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒரு வாகனம் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆனால் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப முடியாமல் திணறும் குடும்பங்களே அதிகம். குறிப்பாக வாகனங்களை தினசரி கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள சாமானிய மக்களின் சிரமத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிக நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வரிகளை குறைக்க வேண்டும், அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்வைத்து அலுத்தே போய் விட்டனர் வாகன உரிமையாளர்கள். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இவற்றை செய்ய முன்வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆனால் மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்பது போலவே தெரிகிறது. இது போதாதென்று கடந்த ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியையும் கொடுத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆம், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை அவர் ஒரு லிட்டருக்கு அதிரடியாக 1 ரூபாய் உயர்த்தினார்.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதன்பின் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. தமிழக தலைநகர் சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73.19 ரூபாய். ஆனால் அங்கு இன்றைய நிலவரப்படி (ஜூலை 18) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எவ்வளவு தெரியுமா? 76.18 ரூபாய். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2.99 ரூபாய் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

அதே சமயம் சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் டீசலின் விலை 67.96 ரூபாய். ஆனால் அங்கு இன்று ஒரு லிட்டர் டீசல் 69.96 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது. அதாவது 2 ரூபாய் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன உரிமையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தற்போது இன்னும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயரப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள்தான் இதற்கு காரணம். இந்தியா பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளில் இருந்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு நேரடியாக செல்கிறது. மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக இந்திய ஆட்டோமொபைல் துறையின் முகம் ஒட்டுமொத்தமாக மாற போகிறது என்பதே உண்மை. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு, சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு காரணம் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களின் இன்ஜின்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளிவிடும் புகையால், மாசடைந்து வரும் இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவே மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த அதிகம் செலவாகும். இதன் காரணமாக சிறிய டீசல் இன்ஜின்களை கொண்ட கார்களை விற்பனை செய்வது என்பது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது. இதன் காரணமாகதான் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்த பல்வேறு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு டீசல் இன்ஜின் கார்களை விற்பனையே செய்யப்போவதில்லை என அறிவித்து விட்டது. ஒரு சில நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தும் சூழலில், மாருதி சுஸுகி அனைத்து விதமான டீசல் இன்ஜின்களையும் கைவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக கார், டூவீலர் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் விலையும் கணிசமாக உயரவுள்ளது. குறிப்பாக டீசல் இன்ஜின் கார்களின் விலை தற்போது இருப்பதை காட்டிலும், 1 லட்ச ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக, வாகனங்கள் விலை மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் விலையும் அதிரடியாக உயர போகிறது என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மார்க்கெட்டில் தற்போது கிடைத்து கொண்டிருக்கும் எரிபொருளை காட்டிலும், பிஎஸ்-6க்கு இணக்கமான எரிபொருள் வித்தியாசமானது. ஆனால் இந்த புதிய எரிபொருள் சுத்தமானது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆனால் தற்போது உள்ள வசதிகளை வைத்து கொண்டு பிஎஸ்-6 எரிபொருளை உற்பத்தி செய்ய முடியாது என கூறப்படுகிறது. இதற்காக குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே பிஎஸ்-6 எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி கூடங்களில் பல மாற்றங்களை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இதற்காக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வரை 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. பிஎஸ்-6 விதிகள் நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் மத்திய அரசின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

ஆனால் இவ்வளவு கடுமையான விலை உயர்வை சாமானிய மக்களால் உடனடியாக ஜீரணித்து கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தம். முன்னதாக இந்தியாவின் வாகன மார்க்கெட் கடந்த சில மாதங்களாக 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை சமீப காலமாக குறைந்து கொண்டே வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இதனால் சரக்கு தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக மாருதி சுஸுகி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வாகனங்களின் உற்பத்தியை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றன. இந்த சூழலில் எரிபொருள் விலை இன்னும் கடுமையாக உயர்ந்தால், வாகன விற்பனை இன்னும் சரிவடைந்து விடும். முன்னதாக பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலையும் கணிசமாக உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

எனவே நாட்டின் சுற்றுச்சூழலுடன் சேர்த்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு அடுத்தடுத்து செக் வைத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து கொண்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அள்ளி வீசி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக கடுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாகதான் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். எனவே நீங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தொடங்குவதே நல்லது!

Most Read Articles
English summary
Petrol, Diesel Prices May Go Up By Around Rs.2 Per Litre, Thanks To BS-6. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X