போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

போருக்கு போகும் நேரத்தில் பூதம் ஒன்று கிளம்பியுள்ளது. இதனால் சவுதி அரேபியாவின் உதவியை பிரதமர் மோடி நாடியுள்ளார்.

போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா தவிர, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை, தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 10) வெளியிட்டது.

இதன்படி வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதியன்று அறிவிக்கப்படவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளதால், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த சூழலில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலான பிரச்னை ஒன்று தற்போது வெடிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் அந்த பிரச்னை.

போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து, வாகன ஓட்டிகளை பாடாய் படுத்தியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையை, தினசரி நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதன்பின் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.

இறுதியில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்பை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்தது. பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

இருந்தபோதும் அந்த நேரத்தில், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்ததும் இதற்கு ஓர் முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக எதிரொலித்தது.

ஆனாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு சொல்லிக்கொள்ளும்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்த சமயத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது.

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகியவைதான் அந்த 5 மாநிலங்கள். இதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் அதுவும் ஓரளவிற்குதான்.

எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் முழுமையான பலன் இந்திய வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இருந்தபோதும் ஓரளவிற்காவது விலை குறைந்ததால், வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியடைந்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இங்கு கடந்த ஒரு மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

போருக்கு போகும் நேரத்தில் கிளம்பிய பூதம்... சவுதி அரேபியாவின் உதவியை மோடி கேட்டதற்கு காரணம் இதுதான்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கியிருப்பதே இதற்கு காரணம். தேர்தல் என்னும் போருக்கு செல்லும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தாறுமாறாக அதிகரித்து விட்டால், பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவி செய்ய வேண்டும் என சவுதி அரேபியாவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாதான் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதிலும், குறைவதிலும் சவுதி அரேபியாவிற்கு முக்கிய பங்குள்ளது. இந்த சூழலில் சவுதி அரேபியாவின் எரிபொருள் துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி தற்போது இந்தியாவிற்கு (Khalid Al-Falih) வந்துள்ளார்.

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, காலித் அல்-ஃபாலி இந்தியா வந்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் பிரச்னையை அவரிடம் இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பியுள்ளார்.

அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நியாயமான நிலையில் இருக்க சவுதி அரேபியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலித் அல்-ஃபாலியிடம், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டு கொண்டுள்ளார்.

இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லாததே அனைத்து பிரச்னைகளுக்கும் மூல காரணம். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவினங்கள், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்டி படைத்து விடுகின்றன.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Petrol, Diesel Prices Surge Again: India Seeks Saudi Arabia's Help To Reduce Crude Oil Rate. Read in Tamil
Story first published: Monday, March 11, 2019, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X