பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய ஆட்டோரிக்ஷா மார்க்கெட்டில் பியாஜியோ நிறுவனத்தின் அபே மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அதிக எரிபொருள் சிக்கனம், கட்டுறுதி, அதிக இடவசதி ஆகியவை பியாஜியோ அபே ஆட்டோரிக்ஷாவிற்கு பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், அபே ஆட்டோரிக்ஷாவின் மின்சார மாடலானது இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அபே இ-சிட்டி என்ற பெயரில் இந்த மின்சார ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு வந்துள்ளது.

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பியாஜியோ அபே இ சிட்டி ஆட்டோரிக்ஷாவில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனத்தில் 4.7kWh திறன் வாய்ந்த பேட்டரி தொகுப்பு உள்ளது.

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் பேட்டரியை உடனடியாக கழற்றி மாட்டும் வசதியுடன் வந்துள்ளது. எனவே, பேட்டரியில் சார்ஜ் குறைந்தால், அருகிலுள்ள சார்ஜ் நிலையத்திலிருந்து சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை வாங்கி உடனே மாற்றிக் கொண்டு பயணத்தை தொடர முடியும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஆட்டோரிக்ஷாவில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியில் சார்ஜ் அளவு, டிரைவிங் மோடுகள், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இதன் மூலமாக பெற முடியும். இந்த ஆட்டோரிக்ஷாவில் பயணிகளின் பாதுகாப்பாக கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: எலெக்ட்ரிக் கார் சார்ஜ் நிலையங்களை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி!

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பியாஜியோ அபே சிட்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவிற்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு திட்டம் மற்றும் 3 ஆண்டுகளுக்கான சிறப்பு பராமரிப்புத் திட்டம் ரூ.3,000 என்ற மிக குறைவான கட்டணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பியாஜியோ அபே சிட்டி ப்ளஸ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவிற்கு ரூ.1.97 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவிற்கு போட்டியாக இருக்கும்.

MOST READ: பேருந்தின் மீது தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்... விநோத தண்டனையை வழங்கிய ஊர் மக்கள்... வைரல் வீடியோ..?

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

பியாஜியோ அபே இ சிட்டி ஆட்டோரிக்ஷா அறிமுக நிகழ்வின்போதே, அபே இ சிட்டி எஃப்எக்ஸ் என்ற மற்றொரு எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவும் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த மாடல் வர இருக்கிறது. இதில், நிரந்தரமாக பொருத்தப்பட்ட லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு இருக்கும்.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio has launched the Ape E-City electric autorickshaw in India and it's priced at Rs. 1.97 lakh (ex-showroom, Delhi).
Story first published: Thursday, December 19, 2019, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X