பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

அபே அடிப்படையிலான மின்சார எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வர இருக்கும் அபே எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வரும் 18

பியாஜியோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம் செய்யும் தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் அபே ஆட்டோரிக்ஷா சிறந்த போக்குவரத்து சாதனமாக விளங்கி வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் பியோஜியோ அபே ஆட்டோரிக்ஷா பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற மாடலாகவும் உள்ளது. அதிக இடவசதி, கட்டுறுதி, அதிக எரிபொருள் சிக்கனம் ஆகியவை இந்த ஆட்டோரிக்ஷாவிற்கு தனி மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், அபே அடிப்படையிலான மின்சார எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வர இருக்கும் அபே எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

மஹிந்திரா நிறுவனம் அண்மையில் தனது எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களை அறிமுகப்படுத்திய நிலையில், பியாஜியோ நிறுவனமும் இந்த மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

பியாஜியோ நிறுவனத்தின் புதிய மின்சார ஆட்டோரிக்ஷாவின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்திய போக்குவரத்துத் துறையில் தங்களது புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பியாஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

பெங்களூரை சேர்ந்த சன் மொபிலிட்டி நிறுவனத்தின் துணையுடன் இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த மாதம் பியாஜியோ தெரிவித்திருந்தது. அதாவது, பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வர இருக்கிறது. இந்த பேட்டரி மாற்றிக் கொடுக்கும் வர்த்தகத்தை சன் மொபிலிட்டி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா சிறப்பான பிக்கப், மின்சிக்கனம் ஆகியவற்றுடன் கட்டுறுதி மிக்கதாக இருக்கும். எனவே, வழக்கம்போல் தனது மார்க்கெட்டை இந்த புதிய மின்சார ஆட்டோரிக்ஷா மூலமாக பியாஜியோ தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

நகர்ப்புறங்களில் பேட்டரியை மாற்றி பயணத்தை இலகுவாக தொடர்வதற்கான வாய்ப்பு அளிப்பதற்கான முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் தயாராக இருக்கும் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் நிலையங்களை அமைப்பதற்கும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது.

 பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்

அதேபோன்று, மிக விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பியாஜியோ முடிவு செய்துள்ளது. வரும் 18ந் தேதி புதிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன அறிமுகத்தின்போது இதற்கான தகவல்கள் வெளியிடப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #பியாஜியோ
English summary
Italian vehicle manufacturer, Piaggio has announced the launch of its Piaggio Ape Electrik on December 18, 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X