Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பியாஜியோ அறிவிப்பால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி: புதிய அபே சிட்டி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பியாஜியோ நிறுவனம், புதிய அபே சிட்டி ஆட்டோ வெளியீடு குறித்த தகவலை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பியாஜியோ இந்தியா நிறுவனம், அதன் புதிய மாடல் ஆட்டோவின் அறிமுகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், புதிய அப்டேட்களைப் பெற்று உருவாகியிருக்கும் அபே சிட்டி பிளஸ் ஆட்டோ ரிக்ஷாவைதான் அந்த நிறுவனம் வருகின்ற 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் உள்ளது.

அபே சிட்டி பிளஸ் ஆட்டோவுக்கு, அந்த நிறுவனம் புதிய டிசைன் தாத்பரியங்களை வழங்கியுள்ளது. மேலும், இந்த ஆட்டோ அனைத்து பயணிகளுக்கும், நகரம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கும் உபயோகிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் மூன்று மாடல் ஆட்டோக்களை விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, அபே சிட்டி, அபே ஆட்டோ பிளஸ் மற்றும் அபே சிட்டி எச்டி ஆகிய மாடல்களைத்தான் அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

இதில், அபே சிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும், மற்றவை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகிய மூன்று விதமான எரிபொருள் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதில், பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட வேரியண்ட்கள், 197சிசி திறனைக் கொண்ட எஞ்ஜின் பெற்றுள்ளது. இது 10பிஎச்பி பவரையும், 17.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, இந்த எஞ்ஜின் லிட்டருக்கு 29.3 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் வாய்ந்தது.

இதே, 197சிசி திறன் கொண்ட எஞ்ஜின்தான், சிஎன்ஜி வேரியண்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.6 பிஎச்பி பவரையும், 15.3 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இதில், ஒரு கிலோகிராம் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பினால் குறைந்தது 27.36 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

அதேபோன்று, எல்பிஜி வெர்ஷனானது, 10.46 பிஎச்பி பவரையும், 16.7 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இது, ஒரு கிலோகிராம் எல்பிஜி-க்கு 22.7 கிமீ மைலேஜ் தரும் திறனைக் கொண்டுள்ளது.

டீசல் மாடலில், 435 சிசி திறன் கொண்ட ஆயில் பர்னர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8 பிஎச்பி பவரையும், 21 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 32.32 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. தற்போது, அறிமுகமாக இருக்கும் புதிய அபே சிட்டி பிளஸ் ஆட்டோவிலும் இந்த வகையிலான எஞ்ஜின் ஆப்ஷனே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
MOST READ: காஷ்மீரில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்: செய்வதறியாமல் உறைந்துபோன போலீஸார்...!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வாகனத்தின் வெளியீட்டின்போதுதான் தெரியவரும். இந்த புதிய ஆட்டோவின் வெளியீடு குறித்த அழைப்பிதழ் வாகன உலகம் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் பியாஜியோ சார்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆகையால், இந்த புதிய அபே சிட்டி பிளஸ் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த ஆட்டோ புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிக்கேற்ப உருவாகியிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.