பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

பினின்ஃபரீனா நிறுவனத்தின் பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கார் வடிவமைப்புத் துறையில் மிக பிரபலமாக விளங்குகிறது. தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கார் தயாரிப்புத் துறையிலும் இறங்கி இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

முதல் கார் மாடலே, உலகையே திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலாக உருவாக்கி இருக்கிறது. பேடிஸ்ட்டா என்ற பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் முதலாவதாக மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

துபாயில் உள்ள அடமாஸ் மோட்டார்ஸ் ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கார் விற்பனைக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.13.95 கோடி மதிப்பில் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது முன்பதிவு மட்டும் துவங்கப்பட்டு இருக்கிறது..

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் இந்த புதிய பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா காரின் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 150 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக 50 கார்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இது எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலாக வருவதால், அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

பினின்ஃபரீனா காரில் 120 kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் சக்கரத்திற்கு ஒன்று வீதம், நான்கு மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நான்கு மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 1,900 பிஎச்பி பவரையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வெளி்பபடுத்தும்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0 - 300 கிமீ வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புகாட்டி சிரோன் காரைவிட அதிக திறன் வாய்ந்த மின்சார கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஹைப்பர் கார் துபாயில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது மின்சார கார் தொழில்நுட்பத்தின் உச்சத்தை பினின்ஃபரீனா பதிவு செய்திருப்பதாகவே கருத முடியும். இந்த காருக்கு கூடிய விரைவில் முன்பதிவு முடிந்து விட்டது என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Most Read Articles
English summary
Pininfarina Battista Launched In Dubai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X