இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? மோடி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக மிக கடுமையாக சரிந்து கொண்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் வீசி கொண்டுள்ள புயலுக்கு மாருதி சுஸுகி உள்பட எந்தவொரு நிறுவனமும் தப்பவில்லை.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

விற்பனை மிக கடுமையாக சரிவதால் வாகன நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால் பலர் வேலையிழந்து வருகின்றனர். நாட்டில் உள்ள வாகன டீலர்ஷிப்கள் பலவும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் பலரும் கொத்து கொத்தாக வீட்டிற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு வர ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM - Society of Indian Automobile Manufacturers) வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு பெரிதாக சலுகைகளை வழங்கவில்லை.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் தற்போது ஒரு வித குழப்பம் நிலவி வருகிறது. ஒருவேளை பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விடுமோ? என்று கூட சிலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

ஆட்டோமொபைல் துறையினரும் மத்திய அரசிடம் இந்த பிரச்னையை எடுத்து சொல்லியுள்ளனர். இந்தியாவில் தற்போது வாகனங்கள் விற்பனை சரிவடைந்து கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கமும் ஒரு காரணம் என மத்திய அரசிடம் ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட காரணங்களால், பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான மக்களின் கவனம் திசை திரும்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது மௌனம் கலைத்து, ஆட்டோமொபைல் துறையை பற்றி பேசியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள நேர்காணல் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் வகையில் உள்ளது. ஆம், இந்தியாவில் ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வாகனங்களும் இருக்கும், எலெக்ட்ரிக் வாகனங்களும் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதன் மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறுகையில், ''ஐசி இன்ஜின் சார்ந்த ஆட்டோமொபைல்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் என இரண்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் மிகப்பெரிய மார்க்கெட்டை இந்த நாடு கொண்டுள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது மட்டுமே. எனவே எதையும் யூகிக்க வேண்டிய அவசியமில்லை'' என்றார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

இதனிடையே ஐசி இன்ஜின் வாகனங்களும் இருக்கும், எலெக்ட்ரிக் வாகனங்களும் இருக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உத்திரவாதத்திற்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தற்போது வரவேற்பு தெரிவித்துள்ளது. முன்னதாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? பிரதமர் மோடி சொன்னது இதுதான்

ஆனால் இதனை அமலுக்கு கொண்டு வந்தால் ஆட்டோமொபைல் துறை இன்னும் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மார்க்கெட் மந்த நிலையை கருத்தில் கொண்டு பதிவு கட்டணங்களை உயர்த்துவதை மத்திய அரசு ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
PM Narendra Modi Assures Petrol, diesel And Electric Powered Vehicles Co-existence In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X