ரகசிய கேமராவால் அம்பலமான போலீசாரின் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பறிப்பதற்காக, போலீசார் செய்து வந்த மெகா மோசடி ஒன்று, ரகசிய கேமராவால் அம்பலமாகியுள்ளது. இது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

வாகன ஓட்டிகளிடம் இருந்து எளிதாக பணத்தை பறிக்க போலீசார் கையில் வைத்திருக்கும் ஆயுதம் வாகன தணிக்கை. டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், வாகன ஓட்டிகளிடம் இருந்து போலீசார் பணத்தை பறிக்காமல் விடுவதே இல்லை.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

குறிப்பாக போதிய அளவிற்கு சட்டம் தெரியாத அப்பாவி வாகன ஓட்டிகளிடம் இருந்து போலீசார் எளிதாக பணத்தை கறந்து விடுகின்றனர். சட்டத்தில் இல்லாத விஷயங்களை எல்லாம் போலீசார் கூறுவதால், விழிப்புணர்வு மிக்கவர்கள் கூட சில சமயங்களில் ஏமாற்றப்படுகின்றனர்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இந்த சூழலில் மஹிந்திரா சைலோ காரில் (Mahindra Xylo), குடும்பத்துடன் பயணித்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம், கும்பலாக நின்றிருந்த போலீசார் பணத்தை பறிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசாரால் அந்த வாலிபர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அங்கு நடைபெற்ற சம்பவங்களை எல்லாம், செல்போன் உதவியுடன் ரகசியமாக வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்களும், போலீசாரால் வழங்கப்பட்ட ரசீது உள்ளிட்ட ஆவணங்களும் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

வாகன ஓட்டிகளிடம் இருந்து ஏதேனும் ஒரு வழியில் பணத்தை பறிக்க போலீசார் சொல்லும் பொய்களும், செய்யும் மோசடிகளும் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. போலீசாரின் மோசடிகளை அம்பலப்படுத்திய வாலிபர், நடந்த சம்பவங்களை எல்லாம், டீம் பிஎச்பி என்ற தளத்தில் எழுதியுள்ளார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதில் அவர் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சோலாப்பூர் நோக்கி, கடந்த மார்ச் 1ம் தேதியன்று, குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தேன். நான்தான் காரை ஓட்டி சென்றேன். அப்போது நான் சீட் பெல்ட் அணிந்திருந்தேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

வழியில் ஒரு டோல்கேட்டை கடந்ததும், காரை நிறுத்தும்படி, போலீஸ்காரர் ஒருவர் சிக்னல் காட்டினார். எனவே காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன். அவர் என்னிடம் டிரைவிங் லைசென்ஸை கேட்டார். நானும் கொடுத்தேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதன்பின் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ளதா? (PUC-Pollution Under Control Certificate) என அவர் கேள்வி எழுப்பினார். அதுவும் என்னிடம் இருந்தது. எனவே அதையும் கொடுத்தேன். ஆனால் அதன்பின், கேரியரில் லக்கேஜ் இருப்பது சட்ட விரோதமானது என அவர் என்னிடம் கூறினார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதற்காக நான் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே நான் அவரிடம், ''சார், கேரியரில் லக்கேஜ் வைக்க கூடாது என எந்த சட்டமும் கூறவில்லை. இது சட்ட விரோதம் எனக்கூறி புனேவில் எங்களை யாரும் நிறுத்தவே இல்லை'' என அமைதியாக தெரிவித்தேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

ஆனால் அந்த போலீஸ்காரர் பிடிவாதமாக இருந்தார். ''இல்லை. இது சட்ட விரோதம்தான். நீங்கள் 200 ரூபாய் அபராதம் செலுத்தியே ஆக வேண்டும்'' என அவர் கூறினார். எனவே வேறு வழியில்லாமல் 200 ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதன்பின் பணத்தை கொடுத்து விட்டு ரசீதுக்காக காத்து கொண்டிருந்தேன். அப்போது 100 ரூபாயை வைத்து கொண்ட அந்த போலீஸ்காரர், மற்றொரு 100 ரூபாயை என்னிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து கிளம்பும்படி கூறினார். எனவே நான் மீண்டும் அமைதியாக, ''சார், ரசீது கொடுங்கள்'' என கேட்டேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இதனால் ரூ.200 அபராதம் விதித்தது போன்ற ஒரு ரசீதை அவர் கொடுத்தார். இதில், சட்டப்பிரிவு 138 (3)/177 குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின் காருக்கு திரும்பிய நான், போலீஸ்காரர் அபராதம் விதித்த செக்ஸன் சரியானதுதானா? என ஆராய்ந்தேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அப்போது எனக்கு அபராதம் விதிக்கப்பட்ட செக்ஸன், சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை தண்டிப்பதற்கானது என்பது எனக்கு தெரியவந்தது. ஆனால் நான் சீட் பெல்ட் அணிந்திருந்தேன். அந்த போலீஸ்காரரிடம் இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியபோது, அவர் என்னை திட்ட தொடங்கினார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அதே சமயத்தில் மற்ற போலீஸ்காரர்கள் சிலரும் அவருக்கு உதவிக்கு வந்தனர். இருந்தபோதும், தவறான செக்ஸனில் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? என்பதற்கு நியாயம் சொல்லுங்கள் என நான் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி கொண்டே இருந்தேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அப்போது எனது மாமா காரில் இருந்து இறங்கி வந்து, அங்கு நடந்த சம்பவங்களை எல்லாம் வீடியோ எடுக்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஒருவர், செல்போனை பறித்து கொண்டு, எங்களை சரமாரியாக திட்டினார். அத்துடன் காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்லுங்கள் எனவும் கூறினார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றாலும் பரவாயில்லை எனவும், இதை எதிர்த்து போராடியே ஆக வேண்டும் எனவும் நான் உறுதியாக முடிவு செய்து கொண்டேன். பின்னர் காருக்கு திரும்பிய நான், போலீஸ்காரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடத்திற்கு காரை கொண்டு சென்று நிறுத்தினேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அப்போது அவர்களுக்கு தலைமை வகித்த போலீஸ்காரர் ஒருவர், ''அவர் அபராதத்தை செலுத்தி விட்டார் அல்லவா? பின்னர் ஏன் அவரிடம் வீணாக வாக்குவாதம் செய்கிறீர்கள்'' என்றார். போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை எடுத்து செல்லும்படி கூறிய போலீஸ்காரரிடம்தான் அவர் இதை தெரிவித்தார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

எனவே எனது கார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இங்கே மற்றொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். காரில் அமர்ந்திருந்த பெண்களிடமும் கூட (எனது அம்மா) போலீசார் வாக்குவாதம் செய்தனர்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

இந்த சூழலில், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து போலீஸ்காரர்கள் பணம் பறிப்பதை, சற்று தொலைவில் இருந்து வீடியோ பதிவு செய்தால் என்ன? என்ற யோசனை எங்களுக்கு தோன்றியது.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அந்த வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிடலாம் எனவும், இதன்மூலமாக என்ன நடக்கிறது? என்பதை பொதுமக்களும் தெரிந்து கொள்ள முடியும் எனவும் நாங்கள் யோசித்தோம். இதன்பின் காரின் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த என் மனைவி அங்கு நடந்தவற்றை வீடியோ எடுத்தார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீஸ்காரர் ஒருவர் நிறுத்தினார். இதன்பேரில் லாரியில் இருந்து இறங்கிய அதன் டிரைவர், வெறும் பணத்துடன் போலீஸ்காரர்களை நோக்கி சென்றார் (உங்கள் கையில் ''தேச தந்தையின் பேப்பர்'' இருந்தால், வேறு எந்த வாகன பேப்பர்களும் தேவைப்படாது).

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

வெறும் பணத்துடன் போலீஸ்கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி, லாரி டிரைவர் செல்லும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதன்பின் அந்த லாரி டிரைவரை அழைத்து நாங்கள் பேசினோம். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில், செக்ஸன் 130/177 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செக்ஸன் தொடர்பாக Indian Driving Schools Traffic Offences And Penalties தளத்தில் தேடினேன்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அப்போது, சரியான இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குதல், சரியான பெர்மிட் இல்லாமல் வாகனம் இயக்குதல் மற்றும் சரியான பிட்னஸ் இல்லாமல் வாகனம் இயக்குதல் ஆகிய குற்றங்களுக்கான செக்ஸன்தான் இது என்பது எனக்கு தெரியவந்தது.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

செக்ஸன் 130/177க்கான குறைந்தபட்ச அபராத தொகை 2 ஆயிரம் ரூபாய் (மேலே உள்ள லிங்கின் படி). அப்படி இருக்கையில், போலீசாரால் எப்படி அவருக்கு வெறும் ரூ.200 மட்டும் அபராதம் விதிக்க முடிந்தது? இந்த டோல்கேட்டில் ஒவ்வொரு மாதமும் தன்னிடம் ரூ.200 வசூலிக்கப்படுவதாக அந்த டிரைவர் கூறினார்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

அந்த டிரைவருக்கு போலீசார் ரசீது எழுதிய வீடியோவையும், நாங்கள் அவருடன் உரையாடிய வீடியோவையும் நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோக்களும், ரசீதுகளின் புகைப்படங்களும் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தவறான சட்டங்களை கூறி வசூல் வேட்டை... போலீசாரின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரகசிய கேமரா...

வாகன தணிக்கையின்போது, போலீசாரின் அத்துமீறல் மற்றும் வசூல் வேட்டை உள்ளிட்ட சம்பவங்களால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Source: Sudeep Dantkale

Most Read Articles
English summary
Police Officers Caught On Camera Extort Money From Vehicle Owners/Drivers: Traffic Offences And Penalties. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X