குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதாவது இந்திய சாலைகள் நாள் ஒன்றுக்கு 821 பேரின் உயிரையும், ஒவ்வொரு மணி நேரமும் 34 பேரின் உயிரையும் பறிக்கின்றன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் இங்கு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் தண்டனை வழங்கப்படுவது கிடையாது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

அதற்கு மாறாக குறைந்தபட்ச அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் அலட்சியமே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீற மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதனை புரிந்து கொண்ட போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு தற்போது மிகவும் வித்தியாசமான தண்டனைகளை வழங்க தொடங்கியுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இந்த தண்டனை வித்தியாசமானதாக பார்க்கப்பட்டாலும் கூட, சற்று கடுமையாகதான் உள்ளது. எனவே இனி வருங்காலங்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களின் பெயர், முகவரி, அவர் மீது பதியப்பட்ட வழக்குகளின் விபரம், நாள், நேரம், பிடிபட்ட இடம், வாகனத்தின் எண் உள்ளிட்ட தகவல்களை பொது வெளியில் பகிரும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட நபர் வேலையை கூட இழக்க நேரிடலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதுமட்டுமல்லாமல், இந்த தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி வருங்காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகர போலீசார்தான் தற்போது இத்தகைய நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதற்கு உடனடி பலன் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் நேற்று (டிசம்பர் 31) இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதன் ஒரு பகுதியாக பலர் குடிபோதையில் வாகனங்களை இயக்கினர். அப்போது புனே மாநகரில், குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 873 பேர் சிக்கினர். ஆனால் கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, 1144 பேர் சிக்கியிருந்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. புனே மாநகர போலீஸ் கமிஷனர் வெங்கடேசம்தான், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார். இந்த சூழலில் தற்போது மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, நாடு முழுவதும் அவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

புனே மாநகர போலீசாரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளதால், இனி வருங்காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

சர்வதேச அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள சூழலில், இந்திய அளவில் விபத்துக்களின் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இந்த சூழலில், சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி

இதுதவிர 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Police Will Share Drunken Driving Details With Your Family And Employer. Read in Tamil
Story first published: Tuesday, January 1, 2019, 17:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X